சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் கடைசியாக பாகிஸ்தான் அணி 15 பேர் கொண்ட குழுவை அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் பல மாதங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் அணியில் விளையாட உள்ள தொடக்க வீரர் ஃபகார் ஜமான் தான் அணியில் இருந்து வெளியேறிய விதம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
அணியை விட்டு வெளியேற காரணம்
கடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. அதன் மூலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது நடைபெற உள்ள சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் வாய்ப்பை பெற்று அதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்த நிலையில் பாகிஸ்தான் அணி மட்டும் தொடர்ந்து அறிவிக்காமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சைம் அயூப் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக கடந்த டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்ற ஃபகார் ஜமான் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் குறிப்பிட்ட வகை நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால்தான் பாகிஸ்தான் அணியில் கடந்த நிகழ்வுகளில் இடம்பெறவில்லை என்று சில முக்கியமான கருத்துகளை பேசி இருக்கிறார்.
எப்படி விளையாடுவது என மறந்தேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” யார் வேண்டுமானாலும் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனக்கு ஹைபர் தைராய்ட்டிசம் என்னும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலமாக எனது எடை 10 கிலோ குறைந்து, எனது தசைகள் பலவீனமாக காணப்பட்டன. நான் அணியில் இருந்து வெளியேறுவதற்கு இது மட்டுமே காரணமே தவிர வேறு எந்த காரணமும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க:அருமை இப்ப புரியுதா.? சீனியர் பிளேயர்ஸ் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து இதை உணரனும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி
நான் இப்போது முழுமையாக ஃபிட்டாக இருக்கிறேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் நான்கு முதல் ஐந்து போட்டிகள் எனக்கு கடினமானதாக இருந்தது. எப்படி விளையாடுவது என்பதை மறந்து விட்டது போல உணர்ந்தேன். இந்த சாம்பியன் ஸ்ட்ராஃபி தொடரை எனக்கும், அணிக்கும் மறக்க முடியாததாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பாபர் அசாம் இந்த தொடரில் ஒரு தொடக்க வீரராக செயல்படுகிறார். அவர் எனக்கு விஷயங்களை எளிதாக்குவார் என்று நம்புகிறேன்” என கூறி இருக்கிறார்.






