அருமை இப்ப புரியுதா.? சீனியர் பிளேயர்ஸ் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து இதை உணரனும் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
703

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப ஸ்ரேயாஸ் ஐயர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அற்புதமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலியின் காயம் காரணமாக விளையாடாமல் போக அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவரை உள்நாட்டு தொடரில் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆறு மாதம் கழித்து மீண்டும் இந்திய ஒரு நாள் அணிக்கு திரும்பினார். ஆனால் அவரது ஆட்டம் தற்போது முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சிறப்பானதாக இருந்தது.

36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 9 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என 59 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய சீனியர் வீரர்களை எதற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதற்கு வலியுறுத்தப்படுகிறது என்பதற்கான அற்புதமான உதாரணம்தான் ஸ்ரேயாஸ் ஐயர் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏன் விளையாடவேண்டும் என்பதற்கு உதாரணம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இன்று அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும் போது அவரது பேட்டிங் டெக்னிக் மற்றும் பந்தை பார்த்து அடித்த விதம் என அனைத்தும் கச்சிதமாக இருந்தது. ஒரு எண்ணேய் தடவிய இயந்திரம் எப்படி பழுதில்லாமல் செயல்படுமோ அதுபோல அப்படி ஒரு அற்புதமான இன்னிங்ஸ் ஆக இருந்தது. உள்ளூர் கிரிக்கெட் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக விளையாட உதவி இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் ஏன் பெரிய வீரர்கள் விளையாடக்கூடாது என்று கேட்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் ஸ்ரேயாஸ் ஐயர்.

இதையும் படிங்க:சாம்சனுக்கு ஆதரவு.. பிரச்சனையில் ஸ்ரீசாந்த்.. மேட்ச் பிக்சிங்கில் யாரு சப்போர்ட் பண்ணா.? கேரள கிரிக்கெட் வாரியம் அதிரடி

அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் விளையாடியதற்கும் தற்போது விளையாடியதற்கும் ஒரு பெரிய தொடர்பு இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். எனவே பெரிய வீரர்கள் ஏன் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதற்கான சரியான உதாரணம் இங்கே இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். அடுத்த போட்டியில் விராட் கோலி காயம் குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா? அல்லது வேறு வீரர் வெளியே உட்கார வைக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -