இந்த இந்திய வீரரால் மட்டும்தான் டி20 உலகக்கோப்பையை வென்று தரமுடியும்- முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்!

0
901
ICT

டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான முதல் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா தொற்றுக் காரணமாக 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது!

இதுவரை நடத்தப்பட்டுள்ள 7 டி20 உலகக்கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆஸ்திரேலியா தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கின்றன.

தற்போது ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் டி20 உலக கோப்பை தொடர் இதுவாகும். அக்டோபர் 16ஆம் தேதி தகுதி சுற்றுப் போட்டிகளோடு ஆரம்பிக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் நவம்பர் 13ஆம் தேதி அன்று முடிவடைகிறது.

இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பற்றி இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சபா கரிம் மிக முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி சபா கரீம் கூறும் பொழுது
” நான் ஒன்று சொல்ல முடியும், டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது என்பது சூரியகுமார் யாதவின் பார்மை பொறுத்தே அமையும். அவர் மிகவும் அருமையாக விளையாடுவதால் நான் இப்படிக் கூறுகிறேன். மிடில் ஓவர்களில், டி20 போட்டியில் இவ்வளவு ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடுவது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. ஆனால் சூரியகுமாரின் திறமை, அனுபவத்தால் அவருக்கு இது மிக எளிதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“ஃபீல்டர்களுக்கு நடுவே சரியான இடைவெளிகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு அசாத்திய திறமை உள்ளது. சில சமயம் அவர் பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறார். மேலும் மைதானத்தில் ஃபீல்டர்கள் இல்லாத காலி இடங்களை அவரால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. எனவே இந்தச் சிறப்பான பேட்டிங் பார்முடன் அவர் உலகக்கோப்பையிலும் மிகச்சிறப்பாக விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.