“ரோகித் மட்டும் போதும்.. கோலி வேண்டாம்.. பிசிசிஐ போடும் கணக்கு!” – பத்திரிக்கையாளர் வெளியிட்டுள்ள பரபரப்பான திட்டங்கள்!

0
3343
BCCI

தற்பொழுது இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்கிறது. இதற்கான மூன்று இந்திய அணிகளும் நேற்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவால் வெளியிடப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாட விருப்பமில்லை என்று தெரிவித்ததாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இடம்பெறவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணியை உருவாக்குவதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகுந்த ஈடுபாட்டை காட்டி வருகிறது.

மாறிவரும் கிரிக்கெட் அணுகுமுறைக்கு மூத்த வீரர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மூத்த வீரர்கள் யாரும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்தியாவுக்கு விளையாடவில்லை.

இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் மூவரையும் நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு இளம் அணியை டி20 உலகக்கோப்பைக்கு அனுப்பவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்புகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசுவதற்காக இந்திய தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய ஒரு குழு கூட்டம் நடைபெற்று உள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பத்திரிகையாளர் அபிஷேக் திரிபாதி வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ள விஷயங்களாக அவர் தெரிவித்ததில், டி20 உலகக்கோப்பைக்கு விராட் கோலி வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நினைப்பதாகவும், டி20 உலகக்கோப்பை குறித்து ரோஹித் சர்மாவை முடிவெடுக்க கூறியதற்கு, அவர் கேப்டனாக வருவதற்கு ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

எனவே டி20 உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் தருவதில்லை என பிசிசிஐ யோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது அப்படியே நடந்தால் இந்திய கிரிக்கெட்டில் நிறைய சர்ச்சைகள் எழும் என்பது குறிப்பிடத்தக்கது!