“பாகிஸ்தான் அணிக்கிட்ட தெளிவா ஒரு விஷயம் தெரிஞ்சது.. இவங்கள சரி பண்றது கஷ்டம்!” – அக்தர் வேதனையான பேச்சு!

0
3611
Akthar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படலாம்.

பாகிஸ்தான் அணி 9 லீக் ஆட்டங்களில் விளையாடி நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இது மிக மோசமான செயல்பாடு இல்லையென்றாலும் கூட, பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததால், எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்தது.

- Advertisement -

எனவே எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பாகிஸ்தான் செயல்படவில்லை என்கின்ற காரணத்தினால், பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் கேப்டன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான அணியின் பலமாக பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு மிகவும் சுமாராக அமைந்தது. மேலும் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு ஆக வேண்டிய ஸ்பின்னர்கள் மிகவும் மோசமாக இருந்தார்கள். மேலும் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் நிலையான பங்களிப்பு செய்யக்கூடியவர்களாக எந்த பேட்ஸ்மேனும் இந்த தொடரில் இல்லை.

இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் அணியை எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் செயல்பட வைத்திருக்கிறது. இதனால் தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் வர இருக்கிறது.

- Advertisement -

இன்று கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி 337 ரன்களை விட்டுக் கொடுத்து 244 ரன்களுக்கு சுருண்டு மீண்டும் பாகிஸ்தான அணி படுதோல்வி அடைந்து தோல்வியுடன் வெளியேறுகிறது.

பாகிஸ்தான அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ள சோயப் அக்தர் கூறும் பொழுது ” பாகிஸ்தானுக்கு இந்த உலகக் கோப்பை தொடரின் பயணம் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. அவர்கள் தொடரில் எந்த நேரத்திலும் உண்மையாக போட்டிக்குள் செல்லவில்லை. தெளிவாக அவர்களிடம் நோக்கம் இல்லாதது தெரிந்தது. நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்கு நோக்கம் முக்கியம்!” என்று கூறி இருக்கிறார்.