இறங்கி ஆட முயற்சி செய்து பேட்டை பறக்கவிட்ட குஜராத் வீரர் மேத்யூ வேட்

0
86

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே தற்போது வான்கடே மைதானத்தில் போட்டி கிட்டத்தட்ட நிறைவுக்கு வரப் போகின்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் 49 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். குஜராத் அணியில் அற்புதமாக பந்துவீசிய முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

காட்டுத்தனமாக சுத்தி பேட்டை பறக்கவிட்ட மேத்யூ வேட்

குஜராத் தனி தற்பொழுது நிதானமாக விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் அற்புதமான துவக்கத்தை(59 ரன்கள்) கொடுத்தனர்.

கில் 18 ரன்களில் அவுட் ஆக பின்னர் மேத்யூ வேட் களமிறங்கினார். 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர் மொயின் அலி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மொயின் அலி வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க பார்த்த மேத்யூ வேட் காட்டுத்தனமாக பேட்டை சுற்றினார். பேட்டில் பட்ட பந்து எதிர்பாரதவிதமாக ஷிவம் டுபே கைக்குச் சென்றது. மேத்யூ வேட் கிளவுஸ் ஈரமாக இருந்த காரணத்தினால் கூட சரியான பிடி அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். தான் அவுட்டானது இதை நம்ப முடியாத மேத்யூ வேட் அங்கேயே நின்று தனது கைகளை பார்த்து பின்னர் பெவிலியன் நோக்கி நடந்து சென்றார்.

வெற்றியை நெருங்கி கொண்டிருக்கும் குஜராத் அணி

தற்பொழுது களத்தில் சஹா மற்றும் டேவிட் மில்லர் நிதானமாக விளையாடி கொண்டிருக்கின்றனர். 16 ஓவர் முடிவில் குஜராத் அணி தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 24 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவை.

ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தகுதியை அடைந்து விட்ட நிலையில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று லீக் தொடரை முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் முடித்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.