ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 தொடரின் 17வது போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் விளையாடி வருகிறது. இதில் ஓமன் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிலால் கான் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சாகின் ஷா அப்ரிடியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் முக்கிய தொடரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த 17வது போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து இருக்கிறது.
அதிகபட்சமாக நமீபியா அணியின் மிடில் ஆட்டக்காரர் மாகன் க்ருகர் 90 பந்துகளில் 73 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் வேன் லிங்கன் 40 ரன்கள் குவித்தனர். மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் நமீபியா 9 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. பந்துவீச்சு தரப்பில் ஓமன் அணியின் பிலால்கான் 10 ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 50 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக ஃபயாஸ் பட் இரண்டு விக்கெட்டுகளும் கலிமுல்லா, ஒதேரா மற்றும் சோயப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இதில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய பிலால் கான் 49 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் ஷா அப்ரட்டியின் சாதனையை பிலால்கான் முறியடித்து இருக்கிறார்.
ஷாஹின் ஷா அப்ரிடி 51 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில், பிலால் கான் 49 போட்டியில் மட்டுமே விளையாடி அவரது சாதனையை முறியடித்து இருக்கிறார். ஓமன் அணியை சேர்ந்த ஒரு பந்துவீச்சாளர் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பது பலரிடையே கவனத்தையும், பாராட்டையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க:2023 உலககோப்பை.. ஆடுகளத்தை மோசமாக தயாரித்து.. சிக்கி இந்தியா தோற்றதா? – விக்ரம் ரத்தோர் பேட்டி
அதற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் மிட்சல் ஸ்டார்க் 52 போட்டிகளிலும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் 54 ஒரு நாள் போட்டிகளிலும், ஐந்தாவது இடத்தில் முஸ்தஃபிக்ர் ரகுமான் 54 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். தற்போது ஓமன் அணி இந்த 196 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.






