உலக கோப்பையை இந்த முறை ஜெயிச்சிடுவீங்களா? – ரோகித் சர்மா தந்த தரமான பதில்

0
15
Rohit

இந்திய அணி தற்பொழுது ரோகித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை விளையாட நியூயார்க் நகரில் முகாமிட்டு இருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவுக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக இந்த தொடரே கடைசியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். தற்போது உலகக்கோப்பையை வெல்ல முடியுமா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்திருக்கிறார்.

இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது. இதற்கு அடுத்து ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி தொடரை 2013ஆம் ஆண்டு மீண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது.

- Advertisement -

இதற்குப் பிறகு இல்லை இந்திய அணி ஒரு உலகக் கோப்பை தொடரையும் கைப்பற்றவில்லை, மேலும் ஐசிசி தொடர்கள் எதையும் கைப்பற்ற வில்லை. கடைசி 11 ஆண்டுகளாக இந்திய அணிக்கு பெரிய தொடர்கள் எதையும் வெல்ல முடியாமல் இருந்து வருகிறது. உலகக்கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இருந்த போதிலும் ஐசிசி தொடர்களை வெல்ல முடியாதது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த முறை எதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்பது குறித்து கேட்ட பொழுது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “என்னைப் பொறுத்தவரை நான் என் வழியில் சென்று விளையாட போகிறேன். வீரர்களை ஒருங்கிணைத்து ஒரே அணியாக விளையாட வைக்க போகிறேன். மேலும் உலகக்கோப்பையில் விளையாட ஒவ்வொருவருக்கும் அவரவர் வழி இருக்கிறது. எனவே எல்லோரும் சரியான முறையில் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் எதையும் முன்னோக்கி பார்க்காமல் இருப்பது நல்லது. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து, விளையாட்டை நன்றாக விளையாட வேண்டும். பின்னர் அங்கிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகம் யோசித்து நம் மீது நாம் அழுத்தம் கொடுத்துக் கொள்ளக்கூடாது.

- Advertisement -

இதையும் படிங்க :

அமெரிக்காவில் ஒரு கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இங்கு பல இடங்களுக்கு நாங்கள் வெளியில் செல்கிறோம். உள்ளூர் மக்கள் இங்கு உலகக் கோப்பைத் தொடர் நடத்தப்படுவது குறித்து உற்சாகமாக இருக்கிறார்கள். எங்களைப் பார்க்கும் அந்த மக்கள் எங்களுக்கு நல்வாழ்த்துக்கள்” தெரிவிக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.