ஐபிஎல் வரும்னு காத்துகிட்டு இருந்தேன்.. ஆனா இந்த பிரச்சனை என்ன இன்னும் மோசமாகிருச்சு – உம்ரான் மாலிக் பேட்டி

0
182

ஐபிஎல் தொடரில் புயல் வேகப்பந்து வீச்சுக்காக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜம்மு காஷ்மீர் வீரரான உம்ரான் மாலிக். கடந்த 2022 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய மிகச் சிறப்பாக 14 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இருப்பினும் கடந்த சீசன் அவருக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்த சூழ்நிலையில் ஐபிஎல்க்காக தான் தயாரான விதம் குறித்து சில கருத்துக்களை உம்ரான் மாலிக் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

அறிமுகமான 2022 சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக 14 ஆட்டங்களில் நன்றாக விளையாடி 22 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் அதற்கு அடுத்த சீசன்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. எண்களை விட உம்ரான் மாலிக்கின் வேகம் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. அடுத்தடுத்த சீசன்களில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த இரண்டு சீசன்கள் மோசமாகவே அமைந்திருக்கிறது.

கடந்த இரண்டு சீசன்களிலும் சேர்த்து 9 ஆட்டங்கள் விளையாடி ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். மேலும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி சீசனில் ஐந்து ஆட்டங்களில் விளையாடி 38 ரன்கள் சராசரிக்கு மேல் கொடுத்ததோடு நான்கு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இந்த மோசமான காலகட்டம் குறித்து உம்ரான் மாலிக் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் கடந்த ஐபிஎல் சீசனுக்காக முழுமையாக தயாராக இருந்தேன். ஆனால் வானிலை எனக்கு உதவவில்லை. ஐபிஎல் தொடருக்கு முந்தைய மாதங்களில் நான் நிறைய சம்பாதித்து இருந்ததால் ஐபிஎல் சீசனில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அதுவும் நான் விரும்பிய வழியில் அமையவில்லை.

ஆனால் அந்த இடைவெளியை நான் பயிற்சி நேரங்களில் நான் விரும்பிய செயல்களைச் செய்ய எனக்கு நேரத்தை கொடுத்தது. நீங்கள் என்னை கேட்டால் நான் சிறந்த பந்துவீச்சாளராகிவிட்டேன் என்று கூறுவேன். ஐபிஎல் தொடருக்கு பிறகு எனது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் குணமாக உடன் அதற்குப் பிறகு டெங்குவால் பாதிக்கப்பட்டேன். எனது பந்து வீச்சில் முன்னேற்றங்கள் குறித்து கூறினால் நான் எனது ஓய்வு நாட்களில் புதிய பந்தில் நிறைய பந்து வீசி இருக்கிறேன்.

இதையும் படிங்க:நான் தோத்து கூட போவேன்.. ஆனா வாழ்க்கையில அத மட்டும் செய்யவே மாட்டேன் – அஸ்வின் ஓபன் டாக்

ஏனென்றால் ஸ்விங் எனது வேகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக ஒரு திட்டத்தை பயன்படுத்தி அதை எவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றுவது என்பதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அத்தகைய திட்டங்கள் இருந்தால் நீங்கள் சவால்களை திறமையாக கையாள்வீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -