ODI உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. அதிரடி மாற்றம்.. தேர்வுக்குழு தைரியமான முடிவு.. பரபரப்பான தகவல்கள்!

0
26386
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை எல்லா அணிகளும் அறிவிப்பதற்கான கடைசி நாள் இன்று. இன்றைய நாள் இரவு 12 மணி வரைக்கும் அதற்கான நேரம் இருந்தது!

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இறுதி அணியை அறிவிக்காத அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இருந்து வந்தன.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி சிறிது நேரத்திற்கு முன்பாக தமது 15 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை அறிவித்தது. அந்த அணியில் ஒரே ஒரு பிரதான சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஜாம்பா மட்டும் இடம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணி தமது உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான உலகக் கோப்பை இறுதி அணியை எப்பொழுது அறிவிக்கும் என்று இந்தியர்கள் தாண்டி கிரிக்கெட் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பாக உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி இந்திய தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரின் போது உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு மட்டும் இருக்கிறது.

பலரும் சர்துல் தாக்கூர் நீக்கப்படுவாரா என்று எதிர்பார்த்தது போல ஏதும் நடைபெறவில்லை. தொடர்ந்து அவர் அணியில் நீடித்து வருகிறார். ஹர்திக் பாண்டியாவுக்கான ஒரு மாற்று தேவையாக அவர் எப்பொழுதும் அணியில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று கடைசி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக, பலரும் எதிர்பார்த்து வந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :

ரோஹித் (கே), ஹர்திக், அஷ்வின், கில், கோஹ்லி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷர்துல், பும்ரா, சிராஜ், குல்தீப், ஷமி, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ்.