ODI பேட்டிங் தரவரிசை.. பாபரை நெருங்கய கில்.. விராட் கோலி உலக சாதனையை காப்பாற்ற வாய்ப்பு.. இன்ட்ரஸ்டிங் மாற்றங்கள்!

0
1525
Gill

டி20 கிரிக்கெட் வடிவம் வந்த பின், டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டியது இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் கிரிக்கெட்டைதான் காப்பாற்ற வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர், மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே குறிப்பிட்ட வரவேற்பை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தக்கூடிய வீரர்களாக பெரிய கிரிக்கெட் நாடுகளில் ஒரு அணிக்கு குறைந்தது மூன்று வீரர்கள் ஆவது இருந்து வருகிறார்கள். இவர்கள் போட்டியில் உண்டாக்கும் தாக்கம் சுவாரசியமிக்கதாக ஆட்டத்தை மாற்றுகிறது.

இந்த வகையில் இந்தியாவின் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், டேவிட் வார்னர், ஸ்மித், பாபர் அசாம் போன்றவர்கள் நட்சத்திர வீரர்கள் ஆக இருந்து வருகிறார்கள்.

நாளை உலககோப்பை துவங்க இருக்கும் நேரத்தில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. சிறிது காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் தரவரிசையில் இருந்து வரும் பாபர் அசாமை, இந்தியாவின் இளம் வீரர் கில் மிகவும் நெருங்கி இருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் இருவரும் செயல்படுவதை பொறுத்து இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.

- Advertisement -

சுப்மன் கில் உலகக் கோப்பையில் பாபர் அசாமை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் இடத்தை கைப்பற்றினால், 2017 ஆம் ஆண்டு முதல் 1258 நாட்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் இருந்து வந்த சாதனையை, பாபர் அசாமால் உடைக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் :

பாபர் அசாம் பாகிஸ்தான் 857 புள்ளிகள்
சுப்மன் கில் இந்தியா 839 புள்ளிகள்
வாண்டர் டேசன் தென் ஆப்பிரிக்கா 743 புள்ளிகள்
ஹாரி டெக்டர் அயர்லாந்து 729 புள்ளிகள்
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 729 புள்ளிகள்
இமாம் உல் ஹக் பாகிஸ்தான் 728 புள்ளிகள்
குயின்டன் டி காக் தென் ஆப்பிரிக்கா 714 புள்ளிகள்
ஹென்றி கிளாசன் தென் ஆப்பிரிக்கா 698 புள்ளிகள்
விராட் கோலி இந்தியா 696 புள்ளிகள்
ரோஹித் சர்மா இந்தியா 695 புள்ளிகள்