ODI.. 515 ரன்கள்.. 450 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. புது வரலாறு படைத்த அமெரிக்கா!

0
7692
USA

நூற்றாண்டு தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் இன்று வரையில் விளையாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் முதன்முதலாக 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது!

இந்த போட்டியின் 40 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் 190 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜான் எட்ரிச் 82 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தோற்ற பொழுதும் அந்த அணியின் கேப்டன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கே ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது. இதுதான் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட சர்வதேச முதல் கிரிக்கெட் போட்டியின் வரலாறு!

தற்பொழுது அண்டர் 19 உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தகுதி சுற்றில் அமெரிக்காவும் அர்ஜென்டினா அணியும் மோதிக்கொண்ட ஒரு போட்டி நடைபெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த தனியாக ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

முதலில் விளையாடிய அமெரிக்க அணிக்கு பேட்டிங்கில் பவ்யா மேத்தா மற்றும் கேப்டன் ரிஷி ரமேஷ் இருவரும் சதம் அடித்து 211 ரன் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். பவ்யா மேத்தா 91 பந்தில் 136 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷி ரமேஷ் அதிரடியாக 59 பந்தில் நூறு ரன்கள் சேர்த்தார். பிரணவ் மற்றும் அர்ஜூன் இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

இதற்கு அடுத்து மிகப் பெரிய அளவில் ரன்களை வாரி வழங்கிவிட்ட அர்ஜென்டினா பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணியால் பந்துவீச்சில் செய்த தவறுகளுக்கு பேட்டிங்கில் சிறிய பிராயச்சித்தம் கூட தேடிக் கொள்ள முடியவில்லை. அமெரிக்கப் பந்துவீச்சாளர்கள் அதற்கு வழி விடவே இல்லை.

பந்துவீச்சில் மிகப் பெரிய அடி வாங்கியது போல, பேட்டிங்கிலும் பெரிய அடியை அர்ஜென்டினா வாங்கியது. வெறும் 65 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 450 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. அமெரிக்கா தரப்பில் ஆரின் நட்கரணி 21 ரன்கள் விட்டு தந்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் இல் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையையும் அமெரிக்க அணி படைத்தது. தற்பொழுது அமெரிக்கா கிரிக்கெட்டில் பெரிய ஈடுபாட்டை காட்டி வருகிறது. அமெரிக்காவிற்கு புலம்பெயரும் கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்தவர்களை கொண்டு, ஒரு அணி உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐபிஎல் தொடர்போல அங்கு எம்எல்சி தொடர் தற்போது வெற்றிகரமாக முதல்முறையாக நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.