ODI.. 8 ஓவரில் 100 ரன்.. இங்கிலாந்து தனி சாதனை.. சிக்கியும் சிக்காத அயர்லாந்து!

0
10138
England

தற்பொழுது அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது. அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தின் இரண்டாம் கட்ட அணி விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயத்த பெரிய இலக்கை நோக்கி அதிரடியாக விளையாடிய அயர்லாந்து கடைசிக் கட்டத்தில் தோற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

இங்கிலாந்து வழக்கம் போல் தனது அதிரடியான பேட்டிங்கை துவங்கியது. துவக்க ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் 21 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 22 பந்தில் அதிரடியாக அரை சதம் அடித்து நொறுக்கினார். அவர் மொத்தமாக 28 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி,ஒரு சிக்சர், ஒரு சிங்கிள் என மொத்தம் 19 ரன்கள் குவித்தார். இது இங்கிலாந்துக்கு முதல் ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக பதிவாகி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் ஜாக் கிரவுலி மற்றும் பென் டக்கட் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி அயர்லாந்து பந்து வீச்சை நொறுக்கி தள்ள ஆரம்பித்தது. ஜாக் கிரவுலி 42 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மற்றும் ஒரு முனையில் நின்று விளையாடிய பென் டக்கட் அதிரடியாக விளையாடி 72 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினால். அவர் மொத்தமாக 78 பந்துகள் சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 2 சித்தர்கள் உடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். ஷாம் ஹைய்ன் 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் 31 ஓவர்கள் முடிந்திருந்த பொழுது நான்கு விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது குறுக்கிட்ட மழை நிற்காத காரணத்தினால், போட்டி மேற்கொண்டு நடத்தாமல் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என வென்றது. போட்டி முழுவதுமாக நடந்திருந்தால் 400 ரன்களை இங்கிலாந்து கடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் போட்டியில் எட்டு ஓவர்களில் நூறு ரன்களை இங்கிலாந்து குவித்தது. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட முதல் நூறு ரன்களாக இது பதிவாகி இருக்கிறது!