நியூசி வராது.. இவங்க நாலு பேர் தான் WC செமி பைனல் போவாங்க.. இந்தியாவின் சர்ச்சை பயிற்சியாளர் சேப்பல் கணிப்பு!

0
1325

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இது உலகக்கோப்பை போட்டிகளில் 13 வது 50 ஓவர் உலகக் கோப்பை ஆகும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு உலகக் கோப்பை திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது . துவக்க போட்டி மற்றும் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இறுதிப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

13 வது உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் தற்போதைய உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? எந்தெந்த அணிகள் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்பது போன்ற கருத்துக்கணிப்புகளை கிரிக்கெட் பண்டிதர்களும் முன்னாள் வீரர்களும் துவங்கி விட்டனர். பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் வெவ்வேறான கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தாலும் அவற்றில் பெரும்பாலான விமர்சகர்களின் கருத்தாக இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்று இருக்கிறது .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக பெயர் பெற்றவருமான கிரேக் சேப்பல் அரை இறுதிப் போட்டிகளுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்று தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். இவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டு காலம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பயிற்சி காலத்தில் அதிக அளவிலான இளம் வீரர்கள் இந்திய அணிக்காக பரிசோதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அண்டர் 19 வீரர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பணியாற்றி வந்த கிரேக் சேப்பல் 2005 ஆம் ஆண்டு அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். இந்திய அணியின் அப்போதைய கேப்டனான சவுரவ் கங்குலியும் பிசிசிஐ நிர்வாகிகளுடன் விவாதம் புரிந்து இவர்தான் அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டும் என்று கிரேக் சேப்பலை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று பெரும் போராட்டமே நடத்தி இவரை பயிற்சியாளர் ஆக்கினார் .

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இவர் பயிற்சியாளராக இந்திய அணியில் தனது பணியை தொடங்கிய சிறிது காலத்திலேயே கங்குலிக்கும் இவருக்கும் மோதல் துவங்கியது . இதனால் கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இவரது பயிற்சி காலத்தில் தான் இந்தியா 25 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன . மேலும் இந்திய அணியின் மூத்த வீரர்களை வேண்டுமென்றே அணையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் இவர் மீது சர்ச்சைகள் எழுந்தது. இதனால் இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராகவே இவர் தனது பதவி காலத்தை முடித்தார் .

இந்நிலையில் கிரேக் சேப்பல் 2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெறுமானிகள் எவை என்ற தனது கருத்துக்கணிப்பினை தெரிவித்து இருக்கிறார் . இவரது கணிப்பின்படி இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவித்துள்ளார். மற்ற ஆசிய அணிகளுக்கும் சிறிது வாய்ப்புகள் இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வலுவாக உள்ளதால் அவை தகுதி பெறும் என தெரிவித்திருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணியின் தற்போதைய பார்ம் அடிப்படையில் அந்த அணி உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெறுவதாக தெரியவில்லை எனவும் கூறி இருக்கிறார்.