வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி.. 4வது டெஸ்டில் இந்தியாவுக்கு ரிசல்ட் எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை – கடைசியில் கோட்டைவிட்ட இலங்கை!

0
409

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

நான்காவது டெஸ்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணி தகுதி பெறவேண்டுமானால் நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி வைத்த 91 ரன்கள் முன்னிலையை ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா அணியினர் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து கடந்துவிட்டனர். தற்போது ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் முன்னிலையும் பெற்றுவிட்டது.

4வது டெஸ்ட், மெல்ல மெல்ல இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலை தந்துவிடும். இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

- Advertisement -

அதாவது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி ஏதேனும் ஒரு டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை பெற்றால், அது இந்திய அணிக்கு ஆபத்தாக அமைந்து நேரடியாக வெற்றி சதவீதம் அடிப்படையில் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையும் ஏற்படலாம்.

தற்போது அந்த நிலை ஏற்படாது என்று தெரிகிறது. ஏனெனில் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 284 ரன்கள் முன்னிலை பெற்றது. அதை சேஸ் செய்து விளையாடி வரும் நியூசிலாந்து அணி 63 ஓவர்கள் முடிவில் 238 ரன்கள் அடித்திருக்கிறது. 7 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 49 ரன்கள் தேவைப்படுகிறது.

அதேநேரம் இலங்கை வெற்றி பெற இன்னும் ஐந்து விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இப்போட்டி டிரா செய்யப்பட்டாலும் அது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்து நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.