டி20 உலகக் கோப்பை 2024

நாங்க ஒரு டீமா இன்னும் கிளிக் ஆகல.. ஆனா இந்தியாவுக்கு எதிரா இது போதும் – இங்கிலாந்து கோச் பேச்சு

இன்று இரவு கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி போட்டி டி20 உலக கோப்பை தொடரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு எதிராக முதல் அடியை கொடுக்க வேண்டிய நேரம் என இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போதைய இந்திய அணி சிறப்பாக இருக்கும் வேளையில், வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளும் இந்திய அணியின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் காணப்படும் நிலையில், இது இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் உகந்ததாக இருக்கிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் பேட்டிங் செய்வதற்கான ஆடுகளத்தில் அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். ஆனால் இப்படி பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும் ஆடுகளத்தில் அவர்கள் மிகவும் சுமாரான அணியாகவே வெளிப்பட்டிருக்கிறார்கள். இந்த வகையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு நிறைய சாதகமான சூழ்நிலைகள் காணப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட் பேசும்பொழுது “நாங்கள் இன்னும் முழு யூனிட்டாக சரியாக கிளிக் ஆகவில்லை. அங்கிருந்து ஏதாவது போட்டிகளில் சிறிய சிறிய சிறப்பான செயல்பாடுகள் மட்டுமே எங்களிடமிருந்து வெளியில் வந்திருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு எதிராக எங்களுடைய ஏ கேம் போதுமானது.

- Advertisement -

நாங்கள் இந்த தொடரில் சில அசிங்கமான கிரிக்கெட் விளையாட வேண்டி இருந்தது. ஆனால் இது நாங்கள் முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம். மேலும் இந்திய அணிக்கு எதிராக எங்கள் முதல் பன்ஞ்சை கொடுக்க வேண்டிய நேரம். நாங்கள் முன்னோக்கி இருந்து அதை விட்டுக் கொடுக்காமல் தொடர வேண்டும்.

இதையும் படிங்க : செமி-பைனல் கயானா மைதானத்தின் புள்ளி விபரம்.. ஆடுகளம் மற்றும் வியூகங்கள்.. இந்தியா என்ன செய்ய வேண்டும்?

நாங்கள் கயானாவில் அரையிறுதியில் விளையாடுவதற்கு எல்லா வகையிலும் வாய்ப்பில் இருந்ததாக நினைத்திருந்தோம். இந்த உலகக் கோப்பை தொடரில் எதற்காக போராட வேண்டி இருந்தது. இது எங்களை ஒரு அணியாக உற்சாகப்படுத்தியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts