சுப்மன் கில் கிடையாது.. இவர் தான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கனும்.. அணில் கும்ப்ளே கருத்து

0
45

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் 19ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வரப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் அணில் கும்ப்ளே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மட்டும் பும்ராவை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய உடல் தகுதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பும்ராவை கேப்டனாக நியமனம் செய்யுங்க:

ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு தொடர்ந்து ஐந்து போட்டிகளில் விளையாடுவது என்பது கடினமான காரியம் தான். அதுவும் அவர் காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அவர் ஓய்வில் தான் இருந்தார். தற்போது ஐ பி எல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அவர் காயம் அடைந்திருந்தாலும் நான் இங்கிலாந்து தொடருக்கு பும்ராவையே கேப்டனாக நியமிப்பேன். ஒருவேளை அவருக்கு காயம் ஏற்பட்டு தொடரை விட்டு வெளியேறும் நிலை வந்தால் பின் துணை கேப்டன், கேப்டனாக பதவியை எடுத்துக் கொள்ளலாம் என்று அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கில்லுக்கு அழுத்தம் தர வேண்டாம்:

இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஆன எம்எஸ்கே பிரசாத், பும்ரா தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கில் அல்லது பும்ரா என இரண்டு பேரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக வந்தாலும்,எனக்கு ஓகே தான்.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் ஐபிஎல் நடத்தினால் ஏற்படும் நன்மை என்ன? வாய்ப்பை பயன்படுத்துமா பிசிசிஐ

பும்ராவுக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. கில்லை கேப்டனாக போட்டு அவரை தொடரின் ஆரம்பத்திலேயே அழுத்தத்தை செலுத்த வேண்டாம் என்று நினைக்கின்றேன். ஒரு பேட்ஸ்மேனாக கில்லுக்கு இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து தொடரில் நல்ல மாதிரியாக அமைய வேண்டும். எனவே பும்ரா ஒரு சிறந்த தலைவராக இருப்பார். இல்லை துணைக் கேப்டனாக நியமிக்கலாம் என்று எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -