முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல், ஆர். அஸ்வினை தன்னம்பிக்கையின் சிறந்த உதாரணம் என்று புகழ்ந்துள்ளார். 2024 டிசம்பரில் 287 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய பிறகு, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். அஸ்வின், சமீபத்தில் ஐபிஎல்-லிருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், அஸ்வின் புதுமையை விளையாட்டில் புகுத்துவதில் வல்லவர் என்று பாராட்டிய பார்த்திவ், அஷ்வினின் பரிசோதனை மனப்பான்மை தமக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ரவிச்சந்திரன் அஸ்வின் தன்நம்பிக்கையின் சிறந்த உதாரணம்.”
புதியவற்றை முயற்சிப்பார்:
“அவரது வாழ்க்கை முன்னேறும்போது, அவர் புதியவற்றை முயற்சித்து, பல பரிசோதனைகளை மேற்கொண்டார். கேரம் பந்தை மிகவும் திறம்பட பயன்படுத்தினார். 2016 டி20 உலகக் கோப்பையில் ஹாஷிம் ஆம்லாவை கேரம் பந்து மூலம் வீழ்த்தியது இன்னும் நினைவில் உள்ளது. தனது திறனை அதிகபட்சமாக பயன்படுத்தியவர் அவர்”
“பல்வேறு வழிகளில் ஆராய முயற்சித்த அவரது அணுகுமுறையை, ரவிச்சந்திரன் அஸ்வினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. நான் அவருடன் செலவிட்ட நேரத்தில், அவர் ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், கேரம் பந்து என எல்லாவற்றையும் வீசுவதைப் பார்த்திருக்கிறேன்.
இது ஆச்சரியமாக இருக்கிறது:
ஆனால், இடது கை லெக் ஸ்பின் வீசாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அதையும் அவர் முயற்சித்திருக்கலாம் என்று நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.அஸ்வின் சமீபத்தில் தி ஹண்ட்ரெட் மற்றும் பிக் பாஷ் லீக் உடன் இணைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, ஓய்வு அறிவிப்பில், அவர் மற்ற உரிமையாளர் லீக்களை விளையாட ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. சிவம் துபேவை வைத்து கம்பீர் மாஸ்டர் பிளான்.. ஆசிய கோப்பையில் அலறவிடும் சம்பவம் – முழு அலசல்
ஐபிஎல் தொடரில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக விளங்கிய அஷ்வின் ஐந்து அணிகளுக்காக 221 போட்டிகளில் விளையாடி, 7.20 என்ற எகானமி ரேட்டில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 16 ஐபிஎல் சீசன்களில் எட்டு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அஸ்வின், சிஎஸ்கேயின் பலவெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். மேலும் அஸ்வின் ஏதேனும் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.






