ஆசியக் கோப்பை தொடரில் சிவம் துபேவை விளையாட வைப்பதில் மூலமாக இந்திய பிளேயிங் லெவனை பலமானதாக மாற்றுவதற்கு சிறந்த வாய்ப்பு கம்பீருக்கு கிடைத்திருக்கிறது.
தற்போது இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக கில் இடம் பெறுகின்ற காரணத்தினால், இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. அதே சமயத்தில் குல்தீப் யாதவையும் விளையாட வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
சுழல் பந்துவீச்சாளர்கள் பங்கு
இந்த ஆசியக் கோப்பை தொடர் நடைபெறும் யுஏஇ சூழ்நிலைக்கு சுழல் பந்துவீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்திய பேட்டிங் வரிசையை 8 வரையில் அமைக்கும் பொழுது, வரும் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் இருவரில் ஒருவரைதான் விளையாட வைக்க முடியும் சூழ்நிலை இருக்கிறது.
குல்தீப் யாதவ் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளரை யுஏஇ கண்டிஷனில் விளையாட வைக்க முடியாமல் போனால் அது பெரிய பின்னடைவை உருவாக்கும். அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் விளையாட வேண்டியது அவசியமாகிறது. இதற்கு சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே இணைந்து விளையாடுவதும் அவசியமாகிறது.
சிவம் துபேவின் பங்கு
இந்திய பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இடம்பெறும் பொழுது, கீழ் வரிசையில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இடத்தில் சிவம் துபேவை விளையாட வைக்க முடியும். சிவம் துபே மிதவேகப் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கம்பீர் தலைமை பேச்சாளர் பொறுப்புக்கு வந்ததும் சிவம் துபே பந்து வீசவைக்கப்பட்டு இருக்கிறார்.
எனவே சிவம் துபேவை பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்துக்கு வைத்துக் கொள்ள முடியும். மேலும் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் இருவரும் பவர் பிளேவில் பந்து வீசுவார்கள். எனவே சிவம் துபே தேவை இருந்தால் மட்டும் பந்து வீசினால் போதுமானது. இதன் மூலம் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம் பெற முடியும். பேட்டிங் வரிசையும் 8 வரையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டிகே-வின் ஆல் டைம் இந்திய பிளேயிங் XI.. வியப்பான 2 வீரர்கள்.. விராட்டுக்கு பொறுப்பு இல்லை
அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.






