இந்த விக்கெட் இப்படி செய்யும் அப்படின்னு நாங்க யாருமே நினைக்கல! – ஹர்திக் பாண்டியா அதிர்ச்சி பேட்டி!

0
1397
HardikPandya

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இடம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்தது!

இதை அடுத்து இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் 3 கோட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து விளையாடியது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஆரம்பத்தில் இரண்டு விக்கட்டுகளை எடுத்து வாஷிங்டன் சுந்தர் செக் வைத்தார். ஆனாலும் கான்வோ மற்றும் டேரில் மிட்சல் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் விளாச நியூசிலாந்து அணி 176 ரன்கள் குவித்தது.

ராஞ்சி ஆடுகளத்தில் கடினமான இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இசான் கிசான், கில், ராகுல் திரிபாதி சரியான பங்களிப்பை செய்யாமல் ஏமாற்றம் அளித்தனர். சூரியகுமார் யாதவ் 40 ரன்கள் எடுக்க இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுக்க இந்திய அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தத் தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ” இந்த விக்கெட் இப்படி இருக்கும் என்று நியூசிலாந்து அணி உட்பட நாங்கள் யாருமே கணிக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து எங்களை விட பெட்டர் ஆன கிரிக்கெட்டை விளையாடியது. இங்கு பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக சுழன்று திரும்பியது. மேலும் பந்து பவுன்ஸ் ஆகவும் செய்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. சூர்யாவும் நானும் விளையாடும் பொழுது இந்த இலக்கை எட்டிப் பிடித்து விட முடியும் என்று நினைத்தோம். மேலும் நாங்கள் 25 ரன்களை கூடுதலாக கொடுத்து விட்டோம்” என்று தெரிவித்துள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக வழக்கமான சிறப்பான செயல்பாட்டை காட்டினார். இவரும் அக்சர் படேலும் தொடர்ந்து இப்படியே சிறப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பயனைத் தரும்!” என்றும் தெரிவித்துள்ளார்!