72 வருடம்.. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நோமன் அலி புதிய வரலாறு.. வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவு

0
539
Noman

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய சுழல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நோமன் அலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் படைத்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

நோமன் அலி சாதனை

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. உள்நாட்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பதை பாகிஸ்தான் வழக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 58 ரன்னுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜஸ்டின் கிரீவ்ஸ், ஏழாவது இடத்தில் வந்த டெவின் இம்லாக், எட்டாவது இடத்தில் வந்த கெவின் சின்க்ளியர் என மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து நோமன் அலி வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் 72 வருட பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சுழல் பந்துவீச்சாளராக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியவராக சாதனை படைத்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கடைசி மூன்று விக்கெட் அசத்தல்

இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி மூன்று விக்கெட்டுகளான மோட்டி 55, கெமார் ரோச் 25, ஜொமல் வாரிக்கன் 36* ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமாக சுருள்வதில் இருந்து தப்பித்து, 41.1 ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இலங்கை மணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். இதுவரையில் நோமன் அலியுடன் சேர்த்து மொத்தம் 6 பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் நோமன் அலி மட்டுமே சுழல் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இப்ப இந்த 2 இந்திய வீரர்கள்.. என்ன பாவம் செஞ்சாங்கனு தெரியல.. அகர்கர் செலக்சன் சரியில்ல – ஹர்பஜன் சிங் விமர்சனம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்:

வாசிம் அக்ரம் – 1999 – லாகூர் பாகிஸ்தான்-இலங்கை
வாசிம் அக்ரம் – 1999 டாக்கா பாகிஸ்தான் – இலங்கை
அப்துல் ரசாக் – 2000 காலே -பாகிஸ்தான் இலங்கை
முகமது சமி – 2002 – லாகூர் -பாகிஸ்தான் – இலங்கை
நசீம் ஷா -2022- ராவல்பிண்டி – பாகிஸ்தான் – பங்களாதேஷ் நோமன் அலி – 2025 – பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் – முல்தான்

- Advertisement -