சாம்பியன்s டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி குறித்து மீண்டும் ஹர்பஜன் சிங் கடுமையான முறையில் தன்னுடைய விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
தற்போது சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒரே மாதிரியான அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அப்போது வெளியான தகவல்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்துக்கு சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய விரும்பியதாகவும் ஆனால் ஆனால் அதை அகர்கர் மறுத்து விட்டதாகவும், மேலும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கம்பீர் கேட்டதாகவும், அதை கேப்டன் ரோகித் சர்மா மறந்து விட்டதாகவும் அணி அறிவிப்பின்போது செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது ஒரே அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள், அதில் இரண்டு பேர் ஒரே மாதிரி பந்துவீசி பேட்டிங் செய்யக்கூடியவர்கள், இரண்டாவது விக்கெட் கீப்பிங் இடத்துக்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது ஆகிய இந்த விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
2 வீரர்கள் பாவம்
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது ” நான் சஞ்சு சாம்சன் பற்றி உண்மையாகவே வருத்தப்படுகிறேன். அவர் தேவையான ரன்கள் எடுத்தார் இருந்தபோதிலும் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவர் ஒரு நாள் கிரிக்கெட் ஆவரேஜ் 56 ரன்கள் என்று சிறப்பாக இருக்கிறது. உங்களால் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று எனக்கு தெரியும். ஆனால் அவருடைய பேட்டிங் ஃபார்முக்கு நீங்கள் அவரை இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்திற்கு தேர்வு செய்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க : ப்ளீஸ் என்னை அவரோட கம்பேர் பண்ணாதிங்க.. என் உழைப்புக்கு கிடைக்கிறது கிடைக்கட்டும் – வருண் சக்கரவர்த்தி பேச்சு
“தற்போது இந்த அணியில் சஞ்சு சாம்சன் இல்லை சாகலும் இல்லை. நீங்கள் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதில் இருவர் இடது கையில் ஒரே மாதிரி பந்துவீசி பேட்டிங் செய்யக்கூடியவர்கள். ஒரு மாறுபாட்டிற்காக நீங்கள் லெக் ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம். சாகல் அதற்கு பொருத்தமானவர். இந்திய அணிக்குப் பொருந்தாத வகையில் அவர் என்ன தவறு செய்தார்? என்றுதான் எனக்கு புரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.