“ஆடுகளத்தின் தன்மைகளை இந்த வீரரை விட யாராலும் சிறப்பாக பயன்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன்” – இர்பான் பதான் கருத்து !

0
511

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகின்ற ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது . இந்தப் போட்டி தொடரை வெல்வதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்திய அணியை பொறுத்தவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை அவர்கள் கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களை இந்திய அணி இடம் தொடர்ச்சியாக இழந்து இருக்கின்றனர் . அதனால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் .

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி நல்ல பார்மில் இருக்கிறது . இதனால் இந்த வாய்ப்பை நிச்சயமாக பயன்படுத்தி அவர்கள் இந்த டெஸ்ட் தொடரில் போராடி வெற்றி பெற முயற்சிப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இந்திய ஆடுகளங்களில் போட்டி நடைபெறுவதால் சுழற் பந்துவீச்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளங்கள் இருக்கும் . எனவே இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின் அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . சில நாட்களுக்கு முன்பு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் ரவீந்திர ஜடேஜா இந்தியா அணிக்கு திருப்புமுனை பந்துவீச்சாளராக இருப்பார் என தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்

இது பற்றி பேசி உள்ள அவர் ” இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் . பொதுவாகவே அவர் ஆடுகலங்களில் கடினமான தன்மை வெளிப்படும் போது பந்து வீச ஆர்வம் காட்டக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் . மேலும் அவர் குறி தவறாமல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பந்து வீசுவதில் கில்லாடி என தெரிவித்துள்ளார் . சில காலங்கள் காயங்களால் அணியில் இருந்து விலகி இருந்த ஜடேஜா தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதால் இந்திய அணிக்கு சிறப்பான ஒரு கம்பக் கொடுக்க அவர் முயற்சி செய்வார் என கூறினார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” தற்போது ரவீந்திர ஜடேஜா நல்ல முதிர்ச்சி அடைந்த ஒரு வீரராக இருக்கிறார் . அவரின் அனுபவம் அவரை ஒரு மேம்பட்ட கிரிக்கெட் வீரராக மாற்றி இருக்கிறது . தற்போது அவரது பேட்டிங்கும் மிகச் சிறப்பாக இருக்கிறது ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக பந்துகளை வீசுவதில் வல்லவரான ஜடேஜா ஆடுகளத்தின் கடினமான பகுதிகளை பயன்படுத்தி எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் எல்லாரையும் விட சிறந்த வீரராக அவரை இருக்கிறார் என கூறி முடித்தார் இர்பான் பதான்