“யாரும் என்னை ஐபிஎல்-ல் வாங்காதது பற்றி எந்த கவலையும் இல்லை!” – புஜாரா அதிரடி!

0
158
Pujara

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் ராகுல் டிராவிட் உலகளவில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர். பொதுவாக கிரிக்கெட்டில் இந்த இடம் அணிக்கு ஏற்படும் விக்கெட் சரிவுகளை நிறுத்தி அணியை காக்கின்ற பெரிய பொறுப்பு இருக்கின்ற இடமாகும்!

இவ்வளவு பொறுப்பு மிகுந்த இடத்தில் ராகுல் டிராவிட் சிவப்பு பந்து மட்டுமல்லாது வெள்ளை பந்திலும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டங்களை நிறைய தந்திருக்கிறார். அணியைச் சரிவில் இருந்து காக்கவும் சரிவு ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டும் அணியை மேலே கொண்டு வரவும் அவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது!

- Advertisement -

ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு அவர் சென்ற உடனேயே அவரைப் போலவே பரோடா வீரர் செதேஸ்வர் புஜாரா கிடைத்தது இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்தான். ஆனால் ஒரே சின்ன வித்தியாசம் புஜாராவால் சிவப்பு பந்தில் மட்டுமே இந்தியா அணிக்கு பங்களிப்பை செய்ய முடிந்தது. அவரால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இப்படி இருந்த காரணத்தால் அவரால் நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் எதையுமே செய்ய முடியவில்லை.

இந்த காரணத்தால் 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் இடம் பெற்று வந்த அவர் அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டுமே இடம்பெற்றார். ஆனாலும் கூட அவருக்கு விளையாட பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த காரணத்தால் இங்கிலாந்து கவுண்டிங் அணியான சசக்ஸ் அணியில் இணைந்த அவர் சிவப்பு பந்து போட்டி மட்டுமில்லாமல் ராயல் லண்டன் கோப்பை வெள்ளை பந்து போட்டியிலும் அதிரடியாக ஆடி அனைவரையும் வியக்க வைத்தார்.

தற்பொழுது மிக முக்கியமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் அவர் பேசியிருப்பதாவது
” டி20 வித்தியாசமான கிரிக்கெட் வடிவம். இந்த குறுகிய வடிவத்தில் என்னால் எனக்கு திறமை இருப்பதாக நான் எப்பொழுதுமே நம்பினேன். நான் உள்நாட்டில் மற்றும் இங்கிலாந்து கவுண்டியில் வெள்ளைப்பந்து போட்டியில் விளையாடும் போதெல்லாம் நன்றாகவே செய்துள்ளேன். ஆனாலும் ஐபிஎல் தொடரை நான் இழக்க நேரிடும். அப்பொழுதெல்லாம் நான் மோசமாக உணரவில்லை. தற்பொழுது நான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவது எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நான் மேலே வர முடியாதது பற்றி நான் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. நான் நிகழ்காலத்தில் இருக்க விரும்பக் கூடியவன். கடந்த காலத்தில் இருந்த விஷயங்களைப் பற்றி அதிகம் சிந்திக்க தேவையில்லை. நான் நிச்சயமாக எனது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை ரசிக்கிறேன். எனக்கு இது பயமில்லாமல் விளையாட உதவுகிறது. நான் பேட்டிகள் சில விஷயங்களில் வேலை செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்!