சதத்தைத் தவறவிட்டதைப் பற்றி எந்த கவலையும் இல்லை ; டீம் ரன் ரேட் பற்றிதான் சிந்தனை இருந்தது – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் மாஸ் பேட்டி!

0
619
Jaiswal

இன்று கொல்கத்தாவில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாகல் நான்கு ஓவர்களில் 25 ரன்களுக்கு நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் தனது சூறாவளி அதிரடி ஆட்டத்தில் மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்தார்.

நிதிஷ் ரானா வீசிய முதல் ஓவரிலேயே 26 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 13 பந்தில் ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதம் அடித்தார்.

முடிவில் அவர் பவுண்டரி அடித்து 13.1 ஓவரில் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 47 பந்தில் 98 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடக்கம்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் பேசுகையில் “வெளியே சென்று நன்றாக விளையாட வேண்டும் என்பதுதான் என் மனதில் எப்போதும் இருந்தது. இன்று ஒரு இனிமையான உணர்வு. நான் விரும்பிய விதத்தில் எல்லாம் நடக்கவில்லை, நான் இதற்காக நன்றாக தயார் செய்கிறேன்; என்னை நம்புகிறேன். இதன் மூலம் முடிவுகள் வரும் என்று தெரியும்.

வின்னிங் ஷாட் அடிப்பது நல்ல உணர்வு. ஆட்டத்தை முடிப்பது எனது குறிக்கோளாக இருந்தது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக மற்றும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

சதத்தைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அணியின் ரன் ரேட் பற்றிதான் சிந்தனை இருந்தது. நானும் சஞ்சுவும் ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று தான் பேசிக் கொண்டிருந்தோம்.

பட்லர் ரன் அவுட் ஆனது விளையாட்டில் இதுவெல்லாம் நடக்கும் என்றுதான் நினைக்கிறேன். இது எனக்கு இன்னும் பொறுப்பை தருகிறது. சஞ்சு பாய் என்னிடம் வந்து இந்த ரன் அவுட் பற்றி நினைக்காமல் தொடர்ந்து விளையாடு என்று கூறினார்.

என்னைப் போன்ற இளைஞர்கள் வந்து செயல்படக்கூடிய ஐபிஎல் போன்ற தொடர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் கனவுகளை நனவாக்க என்னைப் போன்ற வீரர்களுக்கு இது சிறந்த தளமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!