நெருப்பில்லாமல் புகையாது.. ஹர்திக் குஜராத்தை விட்டு மும்பை இந்தியன்ஸ் ஏன் போக வேண்டும்? – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
4315
Hardik

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தற்பொழுது வீரர்கள் பரிமாற்றம் மற்றும் வெளியேற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நாளையே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதைச் சுற்றி ஒரு பெரிய விஷயம் பரவிக் கொண்டிருக்கிறது. அது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உலகத்தின் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

- Advertisement -

அது என்னவென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார் என்பதுதான் அது.

மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வீரர்களை யாரையும் கொடுக்காமல் 15 கோடி ரூபாய் பணம் மட்டும் கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை வாங்க இருக்கிறது என்று பேசப்படுகிறது.

மேலும் இது இஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்ஃபோ வலைதளத்தில் இருந்து வந்திருக்கக் கூடிய செய்தியாக இருப்பதால் இந்த செய்தியின் மீதான நம்பகத்தன்மை மிக அதிகமாக காணப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” இப்படி ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தங்கள் அணிக்காக இரண்டு சீசன்களில் ஒரு முறை கோப்பையையும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்ற ஹர்திக் பாண்டியாவை குஜராத் வெளியே விடுமா? குஜராத்தை விட்டு மும்பைக்கு சென்றால் ஹர்திக் கேப்டனாக இருப்பாரா? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது.

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் பார்த்தால் நிச்சயமாக ரோகித் சர்மாவை குஜராத்துக்கு மும்பை விட்டுத் தராது. மேலும் தற்பொழுது பரவிக் கொண்டிருக்கும் விஷயங்கள் நெருப்பில்லாமல் புகையாது. ஏதோ நடப்பது போல்தான் தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை தங்கள் அணியிலிருந்து விடுவிக்கும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் அவர்களுக்கு 8 கோடி ரூபாய் பணம் கிடைக்கும். இது அவர்களுக்கு ஏலத்தில் வேறு வீரர்களை வாங்குவதற்கு உதவியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!