பாண்டியா,ஜடேஜா இல்லை.. வேர்ல்ட் கப் வாங்கி தரப்போறது இந்த 29 வயது ஆல் ரவுண்டர் தான் – இந்திய முன்னாள் வீரர் ஆச்சரியத் தேர்வு

0
3777

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற பிறகு 28 வருடங்கள் கழித்து 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 10-வது உலக கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக கைப்பற்றியது. அதன் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மற்றும் ஐந்து 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

இந்த முறை 13வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் இந்திய அணிக்கு தற்போதைய வழங்க தொடங்கிவிட்டனர். சமீபத்தில் கூட இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வாசிம் ஜாஃபர் தனது உலகக்கோப்பை யின் உத்தேச அணியை தேர்வு செய்து வெளியிட்டு இருந்தார் .

தற்போது அவர் இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று தரப்போகும் ஆல்ரவுண்டர் இவர்தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் . ஆனால் அந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இல்லை என்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது . இது தொடர்பாக பேசியிருக்கும் வாஷிம் ஜாஃபர் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான அக்சர் பட்டேல் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக கோப்பையை வென்று தரும் முக்கியமான வீரராக இருப்பார் என தெரிவித்திருக்கிறார் .

இது தொடர்பாக இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதள விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் ” இந்திய அணி ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து விட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேலை அணியில் சேர்க்க வேண்டும். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அக்சர் பட்டேல் நிச்சயமாக ஒரு நட்சத்திர வீரராக திகழ்வார். அக்சர் பட்டேல் ஒரு மேட்ச் வின்னர் . அவர் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் நிச்சயமாக இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக செயல்படுவார்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

2014 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது ஒரு நாள் கிரிக்கெட் கேரியரை துவங்கிய அக்சர் பட்டேல் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வைத்து நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உலகக் கோப்பை தொடரின் போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து ஜடேஜா காயம் ஏற்படும் போதெல்லாம் அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையின் இந்திய அணியும் இடம் பெற்று இருந்தார் . ஒரு சில போட்டிகளில் விளையாடினாலும் ஆட்டத்தில் இந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 52 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் அக்சர் பட்டேல் 413 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.