“ஷாகின் அப்ரிடிக்கு பயப்படத் தேவையில்லை; இதைப் பண்ணுங்க” – இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கம்பீர் நச் ஐடியா!

0
336
ICT

ஆஸ்திரேலியாவில் வருகின்ற இருபத்தி இரண்டாம் தேதி எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்தத் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இதற்கு அடுத்த நாள் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடக்க இருக்கிறது!

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியைச் சந்தித்தது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி, அந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

- Advertisement -

தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோத இருப்பது, கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வால் அதிகப்படியான எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

மேலும் கடந்த ஆண்டு இந்திய அணிக்கு ஏற்பட்ட அந்த படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி. இவர் துவக்கத்தில் மூன்று ஓவர்கள் வீசி அதில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மாவை சீக்கிரத்தில் வெளியேற்றி இந்திய அணிக்கு எடுத்ததுமே மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கி விட்டார். அடுத்து திரும்பி வந்து தனது 4-வது ஓவரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி மீண்டும் இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்றி, இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார்.

தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் இடதுகை துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இந்திய பேட்ஸ்மேன்கள், இந்த பாகிஸ்தான் இடதுகை இளம் வேகப்பந்து வீச்சாளரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி கவுதம் கம்பீர் கூறும்பொழுது
” ஷாகின் அப்ரிடி பந்து வீசும் பொழுது விக்கெட்டை தற்காத்துக்கொள்ள நினைக்காதீர்கள். அவர் பந்துவீச்சில் ரன்களை அடிக்க பாருங்கள். விக்கெட்டை தற்காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், பின்பு எல்லாமே சிறியதாக மாறிவிடும். நீங்கள் பேக் லிப்ட் செய்வதாக இருந்தாலும், புட் ஒர்க்காக இருந்தாலும் சரி, உங்களால் அதற்கு மேல் களத்தில் உயிர் வாழ முடியாது. புதிய பந்தில் அவர் ஆபத்தான பந்துவீச்சாளர் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவரை எதிர்கொள்ள இந்திய அணியிடம் முதல் 4 தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். எனவே ஷாகின் அப்ரிடிக்கு பதுங்க கூடாது; ரன்களுக்கு பாய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!