ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த முறை 20 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் அமெரிக்கா சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் ஸ்காட்லாந்தும் சிறப்பாக விளையாடி கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசைன் இந்த டி20 உலகக் கோப்பையில் இருந்து சிறந்த அணியைத் தேர்வு செய்திருக்கிறார்.
அவர் தேர்வு செய்த அணியில் இங்கிலாந்து வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. மேலும் இங்கிலாந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆனாலும் அவர் ஒரு இங்கிலாந்து வீரரை கூட தேர்வு செய்யவில்லை. மேலும் ஒரு இந்திய வீரரை மட்டும் தேர்வு செய்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்.
நாசர் ஹுசைனின் இந்த தேர்வில் சிறிய அணிகளில் இருக்கக்கூடிய வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் மிக அதிகபட்சமாக மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் அவருடைய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த அணி தேர்வில் அவருடன் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆதர்டன் இணைந்து தேர்வு செய்தார்.
இவர் தேர்ந்தெடுத்து இருக்கும் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்காட்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் மெக்முலன், அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து டிராவிஸ் ஹெட், ரஹமனுல்லா குர்பாஸ் ஆகியோர் வருகிறார்கள்.
இதற்கு அடுத்து மிடில் ஆர்டரில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அல்ஜாரி ஜோசப், அகேல் ஹுசைன், ஆடம் ஜாம்பா, பஸருல்லா பரூக்கி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. கம்பீரை வைத்து மாஸ் பிளான்.. செலக்ட் ஆகும் 4 இளம் வீரர்கள்.. பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல்
இவர்களுடைய அணியில் இங்கிலாந்து வீரர்கள் இல்லாதது மட்டும் இல்லாமல், இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்களும் இல்லாதது ஆச்சரியமானதாக இருக்கிறது.