டிராவிட் இல்லை.. ஆசியன் கேம்ஸ்க்கு இந்திய அணிக்கு புது கோச்.. ருதுராஜ் உடன் இணையும் லெஜன்ட்ரி இந்திய வீரர்!

0
4985
Ruturaj

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வாரத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று வென்று வந்தது!

தற்பொழுது ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக, கர்நாடக மாநிலம் ஆலூரில் ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டு இந்திய அணி பயிற்சி பெற்று வருகிறது!

- Advertisement -

இதற்கு நடுவில் ருதுராஜ் தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி சீனாவில் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு டி20 வடிவத்தில் விளையாட இருக்கிறது. இதேபோல் மகளிர் கிரிக்கெட் அணி ஹர்மன்பிரித் கவுர் தலைமையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடுகிறது.

சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 26 ஆம் தேதி முடிவடைகிறது. ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 28ஆம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 7ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி 13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் இடம்பெற வாய்ப்பிருக்கின்ற வீரர்களை தவிர்த்து, மற்ற வீரர்களைக் கொண்ட அணி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

- Advertisement -

ருதுராஜ் தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராகவும், சாய்ராஜ் பகதுலே பந்துவீச்சு பயிற்சியாளராகவும், முனீஸ் பாலி பீல்டிங் பயிற்சியாளராகவும் மற்றும் இவர்களது துணை பயிற்சி ஊழியர்களும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஹிருஷிகேஷ் கனித்கர் தலைமைப் பயிற்சியாளராகவும், ராஜீவ் தத்தா பந்துவீச்சு பயிற்சியாளராகவும், சுபதீஷ் கோஷ் பீல்டிங் பயிற்சியாளராகவும் மற்றும் இவர்களது துணை பயிற்சி ஊழியர்களும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் நிலை முக்கிய இந்திய அணி வழக்கம்போல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலும், ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியின் கீழும் செயல்படும். ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி, இலங்கை கண்டி மைதானத்தில் பாகிஸ்தான அணியை செப்டம்பர் இரண்டாம் தேதி சந்திக்கிறது!

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)

ரிசர்வ் வீரர்கள்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்