358 ரன்.. நிதீஷ் குமார் அதிரடி சதம்.. மகத்தான 2 சாதனைகள்.. இந்திய அணி தப்பித்து விட்டதா?

0
3860
Nitish

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் நெருக்கடியில் இருந்த இந்திய அணியை பேட்டிங்கில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

நேற்று இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 165 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருந்தார்கள். இந்த நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடக்க இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

கலக்கிய நிதிஷ் குமார் வாஷிங்டன் ஜோடி

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் ஆரம்பித்து நடக்க ரிஷப் பண்ட் 28, ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து பொறுமையாக இந்திய அணியை மீட்டுக் கொண்டு வர ஆரம்பித்தார்கள்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்தார்கள். இந்த நிலையில் இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 285 பந்துகளில் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. அருமையான ஒத்துழைப்பு தந்த வாஷிங்டன் சுந்தர் 162 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

நிதிஷ் குமார் அபார சதம்

இந்த நிலையில் 99 ரன்னில் இருந்த நிதிஷ் குமார் கடைசி விக்கெட் முஹமது சிராஜை வைத்துக்கொண்டு பவுண்டரி அடித்து தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார். மைதானத்தில் இதைப் பார்த்த அவரது தந்தை கண்ணீர் விட்டு தனது வெளிப்படுத்தியதை பார்க்க நெகிழ்வாக அமைந்தது. வெளிச்சம் குறைவாக இருந்ததால் போட்டி முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இந்திய அணி இன்று 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் எடுத்திருக்கிறது. நிதிஷ் குமார் 176 பந்தில் 105 ரன், சிராஜ் 2 ரன் உடன் களத்தில் இருக்கிறார்கள். மேலும் 116 ரன் பின்தங்கி இருக்கிறது.

மேலும் இந்த சதத்தின் மூலம் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஐந்தாவது வீரராகவும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக குறைந்த வயதில் டெஸ்ட் சதம் அடித்ததில் சச்சின் மற்றும் ரிஷப் பண்டுக்கு அடுத்து மூன்றாவது இளம் வீரராகவும் சாதனை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செஞ்சது பைத்தியக்காரத்தனம்.. காலையில நாங்க ஒரு விஷயம் பேசிட்டு இருந்தோம் – டேமியன் பிளமிங் விமர்சனம்

தற்பொழுது இந்த போட்டி இருக்கும் நிலையில் இந்திய அணி 70 முதல் 80 ஓவர்கள் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி வாய்ப்பு கொடுக்கலாம். இல்லை அவர்களை குறைந்த ரன்னில் சுருட்ட முடிந்தால் இந்திய அணி வெல்லவும் வாய்ப்பு உண்டு. இந்த போட்டியை பொறுத்தவரையில் தற்போது டிரா செய்யவும் போட்டியை வெல்லவும் கூட இந்திய அணிக்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -