நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 20 வயதான வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். இந்த நிலையில் தோனி பற்றி அவர் கூறிய ஒரு கருத்து பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டி 13 போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்களுடன் 303 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரை தயார் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதீஷ் குமார் ரெட்டி “தோனியின் பேட்டிங் டெக்னிக்குகள் விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக்குகளுக்கு இணையானதாக கிடையாது. இருந்தாலும் கூட அவர் ஒரு ஜாம்பவான். அவருடைய பலம் மற்றும் ஆட்டம் என்னவென்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர் சாம்பியன் ஆனார்” என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் அவருடைய வீடியோவை கட் செய்த சிலர் தோனி விராட் கோலிக்கு இணையாக பேட்டிங் டெக்னிக் கொண்டவர் கிடையாது என்பதை மட்டும் இணையத்தில் பரப்ப, அது வைரல் ஆகி நிதிஷ்குமார் ரெட்டிக்கு தோனி ரசிகர்களிடமிருந்து பெரிய கண்டனங்கள் உருவாகி இருந்தது.
இது பெரிய பிரச்சனையாக உருவாக நிதீஷ் குமார் ரெட்டி இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர் “நான் எப்பொழுதும் தோனி பாயின் மிகப்பெரிய ரசிகன். கேள்வி திறமையா அல்லது மனமா என்ற வகையில் கேட்கப்பட்டது. நான் தோனி பாய் மனநிலையை வைத்து வெற்றி பெற்றதை உதாரணமாக எடுத்து பதில் கூறினேன்.
இதையும் படிங்க : பணக்கார பையன் இல்ல.. கையில் எப்பவும் காசு கூட இருக்காது.. பாபர் அசாம் உலக கோப்பைக்கு முன் உருக்கம்
வெற்றியை தீர்மானிப்பதில் மனப்போக்கு மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். சிலர் அந்த வீடியோவை வெட்டி பரப்பி வருகிறார்கள். அதில் நான் பேசியிருக்கும் முழுவதையும் கேட்காமல் எதிர்மறையாக பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.