ஹர்திக் பாண்டியா செஞ்ச அந்த காரியத்தை மறக்கவே முடியாது.. 2 பேர்தான் இன்ஸ்பிரேஷன் – நிதிஷ் ரெட்டி பேட்டி

0
20
Nitish

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மிதவேக பந்துவீச்சு இந்திய இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நம்பிக்கையளிப்பவராக இருந்தார். மேலும் ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஹர்திக் பாண்டியா அவருக்கு செய்த ஒரு காரியம் குறித்து மிகவும் நெகிழ்வாக பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி 33 ரன்கள் குவித்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 143 என சிறப்பாக இருந்தது. மேலும் இரண்டு அரை சதங்களும் அடித்திருந்தார். அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு விளையாடி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் இடத்துக்கு சரியான மாற்று கிடைத்திருப்பதாக கருதப்பட்டது. இவரது பந்துவீச்சு ஹர்திக் பாண்டியா அளவுக்கு வேகம் கொண்டதாக இல்லாவிட்டாலும் கூட, இளம் வயதாக இருப்பதால் தொடர்ந்து பயிற்சி மூலம் இவரால் சிறப்பான நிலைக்கு வந்துவிட முடியும்.

அதே சமயத்தில் இவருடைய பேட்டிங் நல்ல பொறுப்புடனும் அதே சமயத்தில் திறமையாகவும் இருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக விக்கட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தடுமாறிய பொழுது விக்கெட்டை விடாமல் விளையாடியதோடு அதிரடியாகவும் விளையாடி அணியை காப்பாற்றி 180 ரன்கள் தாண்டி கொண்டு வந்தார். அந்தப் போட்டியிலேயே இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி என தெரிந்தது. ஆனால் ஹெர்னியா பிரச்சனையால் ஜிம்பாப்வே தொடரில் இடம் கிடைத்தும் விளையாட முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசி இருக்கும் நிதீஷ் குமார் ரெட்டி “களத்தில் நான் காட்டும் இண்டெண்ட் மற்றும் என்னுடைய ஆற்றல் நன்றாக இருப்பதாகவும் விளையாட்டை மதிக்க வேண்டும் எனவும் ஹர்திக் பாண்டியா எனக்கு ஐபிஎல் தொடர் மெசேஜ் அனுப்பினார். விரைவில் பேசுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : அகர்கர் சும்மா சாக்குபோக்கு சொல்லாதிங்க.. ஹர்திக் விஷயத்தில் இதான் நடந்தது – பாக் ரஷித் லத்தீப் பேட்டி

அந்த மெசேஜ் பார்த்து உண்மையில் நான் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் நான் ஆல்ரவுண்டராக உருவாவதற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் தான் எனக்கு உத்வேகம் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த இருவரையும் நான் இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு மெசேஜ் அனுப்பியதற்கு நன்றி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -