இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் வந்ததும் தொடர்ந்து மோசமான சாதனைகளாக இந்திய அணிக்கு வந்து கொண்டிருப்பதாக ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு இந்திய ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு குறைந்து இருப்பது வருத்தப்படக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது.
கம்பீர் பயிற்சியில் 3 மோசமான சாதனைகள்
இந்திய அணிக்கு கம்பீர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு 27 வருடங்கள் கழித்து இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்து, ஆசிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்த அணியாக மோசமான சாதனை படைத்தது.
இது தொடர்ந்து 12 வருடம் மற்றும் 18 டெஸ்ட் தொடர்களாக உள்நாட்டில் தோல்வியடையாமல் இருந்து வந்த இந்திய அணி நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் கம்பீர் பயிற்சியில் இந்திய அணி மூன்று முக்கியமான மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு மோசமான சாதனையும் காத்திருக்கு
இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “தற்பொழுது இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. நாங்கள் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்தது கிடையாது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டு இருக்கிறோம். ஆனால் இது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நடந்ததில்லை.தற்பொழுது மோசமான சாதனையை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருக்கிறோம்”
இதையும் படிங்க : 2021 என் ஆஸி டீமை ஜெயிக்க காரணம்.. ரிஷப் பண்ட் இல்லை.. இவர்தான் வீழ்த்தினார் – டிம் பெய்ன் விளக்கம்
“இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி புள்ளிகளும் அடங்கி இருக்கின்ற காரணத்தினால் நீங்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் உங்களுக்கு 33 சதவீத புள்ளிகள் கிடைக்கும். கம்பீர் பயிற்சியில் ஏற்கனவே மோசமான சாதனைகள் வந்திருக்கின்றன. மேலும் இன்னொரு மோசமான சாதனையையும் முறியடிக்க வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.






