147 ஆண்டு டெஸ்ட் வரலாறு.. ஜோ ரூட் ஆசியாவில் செய்த அமர்க்கள சாதனை.. நம்பர் 1 ஃபாரின் பேட்ஸ்மேன்

0
437
Root

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முல்தான் மைதானத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்ததின் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசியாவில் எந்த வெளிநாட்டு வீரரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் அவர் ஐயாயிரம் ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்திருக்கிறார். மேலும் 17 க்கும் மேற்பட்ட சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்திருக்கிறார். இந்த புள்ளி விபரத்தின் அருகில் கூட எந்த விரலும் கிடையாது.

- Advertisement -

ஜோ ரூட்டிடம் சிக்கிய பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான அணி நிர்வாகம் தோல்வியடைந்தால் கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டிவரும் என்பதற்காக பேட்டிங் செய்ய மிக சாதகமான ஆடுகளத்தை முதல் டெஸ்ட் போட்டிக்கு உருவாக்கி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் அடித்திருந்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி திருப்பி இரண்டு மடங்காக பதிலடி கொடுத்து ஏழு விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 262 மற்றும் ஹாரி புரூக் 317 ரன்கள் குவித்தார்கள். இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு 454 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

- Advertisement -

ஆசியாவில் அமர்க்கள சாதனை

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முல்தான் மைதானத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்ததின் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசியாவில் எந்த வெளிநாட்டு வீரரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார்.

இந்த இரட்டை சதத்தின் மூலமாக பாகிஸ்தான், இலங்கை, இந்தியா என மூன்று ஆசிய நாடுகளிலும் சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்த ஒரே வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்கின்ற அரிய சாதனைக்கு ஜோ ரூட் சொந்தக்காரர் ஆனார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த மூன்று நாடுகளிலும் இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன்கள் யாருமே கிடையாது. மேலும் ஆசியாவில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் ஆகவும் ஜோ ரூட் மட்டுமே இருக்கிறார். மேலும் இந்த மூன்று நாடுகளிலும் டெஸ்ட் இரட்டை சதங்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேன்களாக வீரேந்தர் சேவாக் மற்றும் ஜெயவர்த்தனா இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஜிம்பாப்வேவின் மோசமான சாதனையை .. 20 ஆண்டுகள் கழித்து சமன் செய்த பாகிஸ்தான் அணி.. 6 பவுலர்களுக்கு நடந்த பரிதாபம்

ஆசியாவில் அதிக டெஸ்ட் இரட்டை சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் :

ஜோ ரூட் (இங்கிலாந்து) – 3
ஏபி.டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) – 2
ஸ்டீபன் ஃப்ளெமிங் (நியூசிலாந்து) – 2
ரோஹன் கன்ஹாய் (வெஸ்ட் இண்டீஸ்)-2
பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) – 2
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) – 2
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) – 2

- Advertisement -