சதம் அடிச்சதும்.. பேட்ட தரையில நிறுத்தி ஹெல்மெட் வெக்க காரணம் இதுதான் – நிதீஷ்குமார் ரெட்டி பேட்டி

0
2762

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்திய அணியை நித்திஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் கூட்டணி காப்பாற்றியது.

இந்த சூழ்நிலையில் நித்திஸ் ரெட்டி சதம் அடித்ததும் தான் கொண்டாடிய விதத்திற்கான காரணம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நித்திஷ் ரெட்டி அபார சதம்

நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி முன்னணி வீரர்கள் வழக்கம் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஏழு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணிக்கு நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி இக்கட்டான இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அதில் நித்திஷ் குமார் ரெட்டி அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

189 பந்துகளை எதிர் கொண்டு 11 போர் மற்றும் ஒரு சிக்சர் என 114 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் சதம் அடித்ததும் ஆடுகளத்தில் ஒரு முட்டியை மடக்கி உட்கார்ந்து பேட்டிங் மேல் பிடியில் ஹெல்மட்டை வைத்து அதை தரையில் ஊன்றி வானத்தை நோக்கி வணக்கம் செய்வது போல அவரது ஸ்டைலில் ஒரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இது பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் அதன் காரணத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தபோது அதை தற்போது அவரே விலக்கி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி செஞ்சதுக்கு காரணம் இதுதான்

இது குறித்து நித்திஷ் ரெட்டி கூறும் பொழுது “நான் என்னுடைய சதம் அடித்தது போது என்னுடைய பேட்டை ஆடுகளத்தில் நட்டு அதற்கு மேல் ஹெல்மட்டை வைத்தேன். அங்கு ஒரு இந்திய கொடி இருக்கிறது எனவே அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்கிற ரீதியில் அது போல எனது உணர்வை வெளிப்படுத்தினேன். நாட்டிற்காக விளையாடுவது என்பது ஒரு மிகப்பெரிய உத்வேகமாகும்.அதை என்றுமே மறக்க முடியாது. நான் சதம் அடித்த போது எனது தந்தை அழுவதை பார்த்தேன்.

இதையும் படிங்க:என்ன காயமா இருந்தாலும்.. ஒரு பவுலரா.. ஸ்டார்க் இத செய்றது வியப்பா இருக்கு – ஆஸி போலண்ட் பேட்டி

அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்று நான் கனவு கண்டேன். அந்தக் கனவு தற்போது நிறைவேறி இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் சதம் அடிக்கும் நிலையில் இருந்த போது சிராஜ் எனக்கு உறுதுணை அளிக்கும் வகையில் ஆதரவாக இருந்தார். நான் நிச்சயமாக சதம் அடிப்பேன் என்று அந்த சூழ்நிலையை நன்றாக எடுத்துச் சென்றார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது” என்று நித்திஷ் ரெட்டி கூறியிருக்கிறார். இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் ஆட்டம் இழந்தது.

- Advertisement -