என்ன காயமா இருந்தாலும்.. ஒரு பவுலரா.. ஸ்டார்க் இத செய்றது வியப்பா இருக்கு – ஆஸி போலண்ட் பேட்டி

0
76

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் காயம் அடைந்தார்.

இந்த சூழ்நிலையில் அவரது காயத்தின் நிலை குறித்து சக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளரான போலன்ட் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 476 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது அவரது பின்புற முதுகில் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மைதானத்தில் அசவுகரியமாக உணர்ந்தார். இந்த நிலையில் இந்திய அணிக்கு தற்போது இரண்டு நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. எனவே ஸ்டார்க் இந்த நிலையில் காயம் அடைந்தால் அது ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கல் ஏற்படுத்துவதாக இருக்கும் நிலையில் இது குறித்து ஷான் போலண்ட் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஸ்டார்கிடம் உள்ள சிறந்த பண்பு

இது குறித்து அவர் கூறும் பொழுது “ஸ்டார்க் இப்போது நன்றாக இருக்கிறார். அவரது முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தெரியாது ஆனால் இடைவெளிக்கு பிறகும் அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். எனவே அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகவே உள்ளார். அவர் எவ்வளவு கடினமானவர் என்று கூறினால் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இதே மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் உடைந்த விரலில் அவர் பந்து வீசுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இதையும் படிங்க:733 நாட்கள்.. முதல் 50.. முடிவுக்கு வந்த பாபர் அசாமின் மோசமான சாதனை.. கடைசி கட்டத்தில் பாக் தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்

அந்த நிலையிலும் அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்விங்கர்களை வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் மிக வேதனையோடு விளையாடக் கூடிய ஒருவராக இருக்கிறார். 90 டெஸ்ட் போட்டிகளில் ஸ்டார்க் இதுவரை விளையாடியுள்ளார். அவர் உண்மையில் எந்த வலியாக இருந்தாலும் அதே வேகத்தில் பந்து வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்துவார் இது ஒரு சிறந்த பண்பு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -