இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அதிரடியாக விளையாடி வங்கதேச அணிக்கு மிகப்பெரிய ரன்கள் இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இதில் இந்திய அணித்தரப்பில் மிகச் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி அரை சதம் அடித்ததன் மூலமாக ஒரு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
நித்தீஷ் குமார் ரெட்டி அபார ஆட்டம்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
தொடக்கத்தில் மூன்று விக்கட்டுகள் விரைவிலேயே வெளியேறினாலும் அதற்குப் பிறகு களம் இறங்கிய இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் வங்கதேசம் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிதிஷ்குமார் ரெட்டி 217.65 ஸ்ட்ரைக் ரேட்டில் ஏழு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர் என 74 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன்கள் உயர முக்கிய பங்காற்றினார்.
ஜெய்ஸ்வாலை முந்தி சாதனை
இரண்டாவது போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலமாக இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் ஆன ஜெய்ஸ்வாலை முந்தி அரை சதம் அடித்த இந்திய வீரர்களில் நான்காவது வீரராக முன்னேறி ரோகித் சர்மா உடன் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். நான்காவது இடத்தில் இந்திய வீரராக இணைந்திருக்கும் நிதிஷ்குமார் ரெட்டிக்கு தற்போது வயது 21 வருடம் 136 நாட்கள் ஆகியுள்ளது. டி20 போட்டிகளில் இந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2007ம் ஆண்டு முதல் டி20 அரைசதம் அடித்தபோது அவருக்கு வயது 20 வருடம் 143 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க:36 முறை.. பங்களாதேஷ்க்கு எதிராக முதல்முறையாக இந்திய அணி 2 சாதனைகள்.. வெஸ்ட் இண்டீஸ் ரெக்கார்டு உடைந்தது
எனவே ரோகித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் திலக் வர்மா அரை சதம் அடித்தபோது அவருக்கு வயது 20 வருடம் 271 நாட்கள் ஆகும். மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கும் நிலையில் அவருக்கு வயது 21 வயது 38 நாட்களாக இருந்தது. நான்காவது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தபோது அவரது வயது 21 வருடம் 227 நாட்களாக இருந்த நிலையில் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தில் நிதிஷ்குமார் ரெட்டி முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






