36 முறை.. பங்களாதேஷ்க்கு எதிராக முதல்முறையாக இந்திய அணி 2 சாதனைகள்.. வெஸ்ட் இண்டீஸ் ரெக்கார்டு உடைந்தது

0
787
Rinku

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவித்து சாதித்திருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் தற்பொழுது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ஏமாற்றிய டாப் ஆர்டர்

முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள், அதிரடி இளம் இடது கை ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்திய அணி 5.3 ஓவரில் 41 ரன்கள் எடுத்து முக்கிய மூன்று விக்கெட்டுகளை டாப் ஆர்டரில் இழந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக மெதுவாக ஆரம்பத்தில் இருந்தது. இதன் காரணமாக பந்துக்கு முன்கூட்டியே விளையாட சென்று இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

நிதீஷ் குமார் – ரிங்கு இங்கு ருத்ர தாண்டவம்

இந்த நிலையில் நிதீஷ் குமார் மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்து சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். குறிப்பாக நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டம் அதிரடியாக இருந்தது. 27 பந்தில் அதிரடியாக தனது முதல் சர்வதேச அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 34 பந்தில் 4 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ரிங்கு சிங் 26 பந்தில் அரைசதம் அடித்து 29 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 19 பந்தில் 32 ரன்கள், ரியான் பராக் 6 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. மாஸான இலங்கை அணி அறிவிப்பு.. புதிய நிரந்தர கோச்.. அதிரடி முடிவுகள்

மேலும் முதன்முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி 200 ரன்கள் தாண்டி இருக்கிறது. அத்துடன் இந்த போட்டியில் மொத்தம் 15 சிக்ஸர்கள் அடித்து பங்களாதேச அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் 14 சிக்ஸர் அடித்திருந்தது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 36 ஆவது முறையாக இந்திய அணி 200 ரன்களை தாண்டி அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 23 முறை மட்டுமே 200 ரன்கள் தாண்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எடுத்து இருக்கிறது.

- Advertisement -