கம்பீர் போட்ட உத்தரவு.. உடனடியாக நிதீஷ் குமார் கொடுத்த அறிவிப்பு.. இந்திய கிரிக்கெட்டில் உடனடி மாற்றம்

0
479
Nitish

இந்திய அணியின் நிதீஷ் குமார் ரெட்டி, கே எல் ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை கம்பீரின் உத்தரவை ஏற்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் முடிவில் முன்னணி நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெறுவதும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கம்பீர் வெளிப்படையான அறிவிப்பு

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இந்திய வீரர்கள் அனைவருமே உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடுவது அவசியம் எனவும், தான் இதை எப்போதும் விரும்புகிறேன் என்றும் வெளிப்படையாக கூறி இருந்தார்.

நடந்து முடிந்த இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் இந்திய நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவில்லை. பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. இதை மனதில் வைத்து கம்பீர் இப்படி பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மூன்று வீரர்கள் முக்கிய அறிவிப்பு

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக உருவாகி வரும் நிதீஷ் குமார் ரெட்டி நடப்பு ரஞ்சி சீசனின் இரண்டாவது கட்டப் போட்டிகளுக்கு தான் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வாவதற்கு தன்னை தயார்படுத்துகிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆப்கான் மாஸ்டர் பிளான்.. முக்கிய முன்னாள் வீரரை தூக்கியது – வெளியான தகவல்கள்

மேலும் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியின் நாக் அவுட் போட்டிகளுக்கு கேஎல்.ராகுல் கிடைக்க மாட்டார் என்றும், ஆனால் ரஞ்சி டிராபி இரண்டாவது கட்ட போட்டிகளுக்கு கிடைப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் தேவ்தத் படிக்கல் விஜய் ஹசாரே நாக் அவுட் போட்டிகளுக்கு கர்நாடக அணிக்கு திரும்புகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -