லக்னோ அணி விஷயத்தில் உரிமையாளர் தலையீடு அதிகமாக உள்ளதா.? நிக்கோலஸ் பூரானின் வெளிப்படையான பதில்

0
689

ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 4 போட்டிகளில் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அணி விவகாரத்தில் அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிகமாக தலையிடுகிறாரா? என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர பேட்டர் நிக்கோலஸ் பூரான் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அணி விவகாரத்தில் தலையீடு

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அணிகளில் ஒன்றான சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு முதல்முறையாக கே.எல் ராகுல் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில் மைதானத்திலேயே அதன் உரிமையாளர் சஞ்சீவி கோயங்கா கேப்டன் கே எல் ராகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

அதன் எதிரொளியாக லக்னோ அணியை விட்டு கேஎல் ராகுல் கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக தற்போது புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அணி தோல்வி அடையும் நேரங்களில் பண்ட் உடன் அவர் சற்று ஆக்ரோஷமாக உரையாடுவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் சஞ்சீவ் கோயங்கா அணி வீரர்களுக்கு ஆதரவு வழங்குவதில் சிறந்தவர் என்று சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பூரானின் வெளிப்படையான பதில்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” வீரர்களை ஆதரிப்பதில் லக்னோ அணியின் உரிமையாளர் மிகவும் சிறந்தவர். கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு வீரர்களே முடிவுகளை எடுக்க அவர் எப்போதும் அனுமதிக்க கூடியவர். அவரிடம் இருந்து அணி விவகாரத்தில் எந்தவிதமான தலையீடும் இருக்காது. இதுவரை நான் அப்படித்தான் உணர்ந்திருக்கிறேன். வீரர்களுக்கு உரிமையாளர்கள் போதுமான வாய்ப்புகளை இதுவரை வழங்கி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. பஞ்சாப் கிங்ஸ் முதல் 2 இடத்தில் இருந்தாலும்.. ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.. காரணம் இதுதான் – மனோஜ் திவாரி

மேலும் அது முழு அணியின் ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெளிவாகிறது. இது ஒரு அற்புதமான விஷயமாகும். வீரர்கள் இப்போது முழுமையான ஆதரவோடும் நம்பிக்கையோடும் வெற்றிகளை பெற ஆரம்பிப்பார்கள்” என்று பூரான் பேசியிருக்கிறார். லக்னோ அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில் இன்னும் ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு ஏறக்குறைய முன்னேறி விடும். எனவே லக்னோ அணி இனி விளையாடக்கூடிய ஒவ்வொரு போட்டியுமே அந்த அனைத்து முக்கியமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -