36 பந்தில் பூரன் செய்த ஆரஞ்ச் கேப் சம்பவம்.. ரிஷப் பண்ட் எடுத்த எதிர்பாராத முடிவு.. ரசிகர்கள் ஆச்சரியம்

0
287
Pooran

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் லக்னோ வீரர் நிக்கோலஸ் பூரன் 36 பந்தில் அதிரடி காட்டி ஆரஞ்சு தொப்பையை மீண்டும் வென்று இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கேகேஆர் முதலில் பந்து வீசுவது என்று அறிவித்தது. அந்த அணியில் மொயின் அலி இடத்திற்கு மீண்டும் ஸ்பென்சர் ஜான்சன் கொண்டுவரப்பட்டார். லக்னோ அணியில் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

மாஸ் காட்டிய துவக்க ஜோடி

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ மணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 62 பந்துகளில் 99 ரன்கள் வந்தது. சிறப்பாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அதிரடியாக 30 பந்துகளில் 71 ரன்கள் வந்தது. மிட்சல் மார்ஸ் 48 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர் 36 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 244 ஸ்ட்ரைக்ரேட்டில் 87 ரன்கள் குவித்தார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 284 ரன்கள் ஒட்டுமொத்தமாக குவித்து மிட்சல் மார்சை பின்தள்ளி ஆரஞ்சு தொப்பியை இதே போட்டியில் மீண்டும் வென்றார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்த காரியம்

இந்த போட்டியில் முதல் விக்கெட் 10.2 ஓவரில் விழுந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது விக்கெட் 15.2 ஓவரில் விழுந்தது. இந்த நிலையில் இரண்டாவது விக்கெட் விழுந்த பிறகு பழக்கமாக வரும் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரவில்லை. அந்த இடத்தில் அப்துல் சமாத் வந்தார். அவர் ஆட்டமிழக்க தொடர்ந்து டேவிட் மில்லர் வந்தார். இறுதிவரை ரிஷப் பண்ட் வரவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. நம்மால் கண்டிப்பாக முடியும்.. இன்னும் தொடர் முடியவில்லை.. மும்பை வீரர்களுக்கு பும்ரா தந்த நம்பிக்கை

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருக்கிறது. மேலும் அவரால் வந்தவுடன் அதிரடியாக விளையாட முடியாது. அதே சமயத்தில் அப்துல் சமாத் பினிஷர் என்பதால் அவரால் முதல் பந்தில் இருந்து அடிக்க முடியும். எனவே அணியின் கேப்டனாக இருந்து எந்த வித ஈகோவும் பார்க்காமல் தேவைக்கு தகுந்தபடி தனது இடத்தை ரிஷப் பண்ட் விட்டுக் கொடுத்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்!

- Advertisement -