113 மீட்டர்.. 4 பந்துக்கு ஒருமுறை 1 சிக்ஸ்.. நிக்கோலஸ் பூரன் ருத்ர தாண்டவம்.. இங்கிலாந்து 100 பந்து போட்டி

0
918
Pooran

தற்போது இங்கிலாந்தில் 100 பந்து தொடர் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று இதில் நடந்த ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 113 மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட சிக்சர் ஒன்றை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். மேலும் தனி ஆளாக நின்று ஆட்டத்தையும் முடித்து வைத்திருக்கிறார்.

நேற்று 100 பந்து தொடரில் நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிராக நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து அந்த அணிக்கு பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த ஜெமி ஓவர்டன் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்தது தான் இரண்டாவது அதிகபட்சமாக அமைந்தது. 100 பந்துகள் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் மிட்சல் சான்ட்னர் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மேட்ச் ஷாட் 4 பந்தில் 1 ரன், பென் ஸ்டோக்ஸ் 4 பந்தில் 2 ரன் எடுத்து காயத்தால் வெளியேறினார். மூன்றாவதாக வந்த ஒல்லி ராபின்சன் 16 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழக்க இந்த அணி நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹாரி புரூக் மற்றும் நிக்கோலஸ் போறன் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி அணியை மீட்டதோடு வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்கள். கேப்டன் ஹாரி புரூக் 26 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து ஒரு மனையில் நின்று விளாசி தள்ளிய நிக்கோலஸ் பூரன் 33 பந்தில் 2 பவுண்டரி 8 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 66 ரன்கள் எடுத்து நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் 3 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அபார வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க : 8 வீரர்கள்.. மீண்டும் விராட் ரோகித்தை கூப்பிடும் கம்பீர்.. உள்நாட்டு மேட்ச் ட்விஸ்ட் – வெளியான தகவல்கள்

இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரன் மொத்தம் சந்தித்தது 33 பந்துகள் மட்டுமே. இதில் சராசரியாக ஒவ்வொரு நான்கு பந்துகளுக்கு ஒரு முறையும் அவர் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார். உதாரணமாக 100 பந்துகள் சந்தித்தால் 25 சிக்ஸர்கள் அடிப்பதற்கு சமம். சில காலமாக டி20 கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் தனி வீரராக போட்டியை வெல்லும் அளவுக்கு அதிரடியாக இருந்து வருகிறது!

- Advertisement -