இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னர் ஏழு விக்கெட் கைப்பற்றினார். இன்றைய நாள் போட்டிக்குப் பிறகு விக்கெட் கைப்பற்றுவதற்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
இன்று இரண்டாம் நாள் முடிவுக்குப் பிறகு நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் இந்திய அணியை விட 301 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஒரு அணியாக சாதனை படைப்பதற்கான வாய்ப்பின் அருகில் இருக்கிறது.
இந்திய அணியை மடக்கிய சான்ட்னர்
சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் புனை மைதானத்தில் அமைக்கப்பட்டதால் நியூசிலாந்து அணியில் சான்ட்நர் வாய்ப்பு பெற்றார். மேலும் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் தந்து 7 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 153 ரன்னில் சுருள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இது குறித்து பேசி இருக்கும் சான்ட்னர் கூறும் பொழுது “இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எளிதானதாக தெரியவில்லை. எங்களுக்கு பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியம் என்றுநாங்கள் அறிவோம். மேலும் இன்று நாங்கள் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் கொஞ்சமாக சுழல ஆரம்பித்தது. நாங்கள் எப்படி பந்து வீசுவது? என்று திட்டமிட்டோம்”
வாஷிங்டன் சுந்தரை பார்த்தேன்
“இங்கு மெதுவான பந்துகள் வீசும் பொழுது பந்து சுழன்று சென்றது. மேலும் கிரீசை பயன்படுத்தி பந்து வீச்சில் கோணத்தை உருவாக்கவும் நான் முயற்சி செய்தேன். வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும் பொழுது கிரீசின் ஓரத்திற்கு சென்று பந்து வீசுவதை நான் கவனித்தேன். பிறகு நான் எனது பந்துவீச்சில் அதை முயற்சி செய்தேன். இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு இருக்கிறது எங்களது நாட்டில் இப்படி கிடையாது”
இதையும் படிங்க: புதர் மாதிரி பிட்ச் இருக்கணும்.. இந்த முறை இந்திய அணிக்கு இப்படித்தான் கொடுப்போம் – பேட் கம்மின்ஸ் பேட்டி
“மேலும் நாங்கள் பேட்டிங் செய்வதற்கு எப்படியான ஷாட் விளையாட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்தோம். அடுத்து நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசும் போது இந்தியாவும் சில ஷாட்டை கொண்டு வந்து விளையாடும் என்று எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.