இந்திய கிரிக்கெட்

பைனலில் அஸ்வின் எதிர்பார்த்தது நடந்தது.. இந்திய அணிக்கு 2 சாதகங்கள்.. கைக்கு வருமா கோப்பை?

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான டாஸ் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் டாஸ் வென்று முதலில் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டிக்கான ஆடுகளமும் மெதுவாகவே இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் முதலில் பேட்டிங் செய்யக்கூடிய அணிக்கு கொஞ்சம் சாதகங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இதில் வித்தியாசமான கருத்துக் கொண்டிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து

இந்தப் போட்டியில் டாஸ் நிகழ்வுக்கு முன்பாக பேசியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வெல்வதை ஒரு இலக்காக நினைக்கக் கூடாது. என்னை கேட்டால் இந்திய அணி டாஸ் தோற்றுவிட வேண்டும். முடிவெடுக்கும் இடத்தில் நியூசிலாந்து இருக்க வேண்டும். இந்திய அணி முதல் மற்றும் இரண்டாவது என எந்த இடத்தில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே நமக்கு இது பிரச்சனை கிடையாது” என்று கூறியிருந்தார்.

முதல் போட்டியில் டாஸ் தோற்ற போதும் அது நல்ல விஷயம் என்றே ரோகித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிராக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்த்தபடியே இந்திய அணி டாஸ் தோற்று இருக்கிறது. எனவே டாஸ் விஷயத்தில் இந்திய அணிக்கு தற்போது எந்த விதமான குழப்பமும் கிடையாது. முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருந்த நியூசிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

- Advertisement -

இரு அணிகளின் மாற்றங்கள்

இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இந்திய அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்படும் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி காயத்தின் காரணமாக விலகி இருக்கிறார். அவருடைய இடத்தில் வேகப் பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் இடம்பெற்று இருக்கிறார். இது இந்திய அணிக்கு இரண்டாவது சாதகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நியூசிலாந்து 7150 கிமீ.. இந்தியா 0 கிமீ.. சில அணிகள் வேற மாதிரி ஜெயிக்குது – பாக் ஜுனைட் கான் விமர்சனம்

மேலும் இந்த போட்டிக்கு இந்தியா அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடிய அதே அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படியான திட்டத்துடன் வருகிறார்கள்? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by