நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 423 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 347 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு சான்ட்னர் 76 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மட்டும் 32 ரன்கள் எடுக்க அந்த அணி 143 ரன்னில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 156 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 453 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பகுதிநேர பந்துவீச்சாளர் ஜேக்கப் பெத்தேல் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு நான்காவது இன்னிங்ஸில் இலக்காக 658 ரன்கள் கொடுக்கப்பட்டது. நேற்றைய மூன்றாவது நாளில் முடிவிலேயே இங்கிலாந்து அணி தங்கள் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இழந்துவிட்டது. இந்த டெஸ்டில் எப்படியும் இங்கிலாந்து அணி தோல்வி அடையும் என்கின்ற சூழல் உருவாகி இருந்தது.
இன்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு ஜேக்கப் பெத்தேல் 76, ஜோ ரூட் 54 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சான்ட்னர் 4 விக்கெட் கைப்பற்ற, தன்னுடைய கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : என் சகோதரா.. இந்த விஷயம் ஏன் மறந்தீங்க.. உங்க பலமே இதுதான் – ரோஹித் சர்மாவுக்கு ஹைடன் ஆதரவு
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு பெரிய வெற்றியாக இது பதிவாகியது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து அணி வென்றவர் இருந்த காரணத்தினால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. ஹாரி புரூக் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.