இந்திய கிரிக்கெட்

நாளை நியூசி தொடரில் சூரியவன்சி களம் இறங்குவாரா?.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிப்படை பதில்

​நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பிளேயிங் லெவன் வாய்ப்பு மற்றும் அணியின் ஓப்பனிங் காம்பினேஷன் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

- Advertisement -

​நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்குள்ள சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

​இருப்பினும், அணியின் வெற்றிக்குத் தேவையான சரியான வீரர்களை தேர்வு செய்வதிலும், ஏற்கனவே சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதிலும் அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

​இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “வைபவ் சூர்யவன்ஷியைப் போன்ற ஒரு திறமையான வீரர் டிரெஸ்ஸிங் ரூமில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியமான விஷயம். அவர் மிகவும் இளையவர், எதிர்காலத்தில் வாய்ப்புகளைப் பெற அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. நம்முடைய ஓப்பனிங் வீரர்கள் தொடர்ந்து ரன் குவித்து வருவதால், அவர் இப்போது நேரடியாக அணியில் உள்ளே நுழைந்துவிட முடியாது என்று இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது “நான் அவரிடம் தொடர்ந்து கூறுவது என்னவென்றால், நீங்கள் உங்களது ப்ராசஸில் நிலையாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், சில சமயங்களில் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். எங்களிடம் இரண்டு ஃபண்டாஸ்டிக் ஓப்பனிங் வீரர்கள் உள்ளனர், இதுகுறிர்தான் நாங்கள் வைபவ்விடம் பேசி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts