4 புள்ளிகளை குறைப்போம்.. ஐசிசி எச்சரிக்கையை மீறி கம்பீர் கில் செய்த சம்பவம்.. செம மூவ் ரசிகர்கள் பாராட்டு

0
33
Gambhir

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மேட்ச் ரெப்ரி கொடுத்த எச்சரிக்கையை இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் கில் இருவரும் மீறி இந்திய அணியை வெற்றி பெற வைத்த செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மிகவும் பரபரப்பான கட்டத்திற்கு சென்று இந்திய அணியின் பக்கமாக முடிந்தது. முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் இருந்த போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

- Advertisement -

ஆச்சரியமான அணுகுமுறை

ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற லண்டன் ஓவல் ஆடுகளம் வெளிப்படையாக வேகப்பந்து வீச்சிக்கு சாதகமாக இருப்பது தெரிந்தது. இருந்தபோதிலும் பேட்டிங் வரிசையை எட்டு வரையில் வைப்பதற்காக கம்பீர் 3 வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே எடுத்துச் சென்றார். இதனால் இந்த மூன்று பேர் மட்டுமே தொடர்ந்து பந்து வீச வேண்டியதாக இருந்தது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் மிகவும் குறைவாக இருந்ததால் அவர்களை பெரிதாக பயன்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக இறுதி நாளில் இந்திய அணி 6 ஓவர்கள் ஓவர் ரேட்டில் பின்தங்கி இருந்தது. அப்போது போட்டியின் ரெஃப்ரி ஜெப் க்ரோவ் இந்திய அணி இந்த ஆறு ஓவர்களை சீக்கிரத்தில் வீசி சமன் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் முக்கியமான நான்கு புள்ளிகளை இழக்க வேண்டியது வரும் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் கில் தைரிய முடிவு

எனவே இதுகுறித்து இந்திய அணி அவசரக் கூட்டத்தை அப்போது நடத்திய போது சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து சீக்கிரத்தில் ஓவர்களை வீசலாம் என்கின்ற ஒரு முடிவும் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து நான்கு விக்கெட் கைவசம் இருக்க 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இருந்தது. ஆடுகளமும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை.

இதையும் படிங்க : சொன்னதை செய்த கம்பீர்.. முடிவுக்கு வரும் இந்திய கிரிக்கெட் பாரம்பரியம்.. இனி அதுக்கு வாய்ப்பே இல்லை

இப்படியான நிலையில் பயிற்சியாளர் கம்பீர் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டாம் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம், நான்கு புள்ளிகள் குறைந்தால் பரவாயில்லை வெற்றியை முக்கியம் என்று முடிவு எடுத்ததாகவும், இதற்கு கேப்டன் கில் சம்மதித்ததாகவும், இதன் காரணமாகவே இந்திய அணி போட்டியை வென்று தொடரை சமன் செய்திருக்கிறது என்ற செய்தி தற்பொழுது வெளியாகியிருக்கிறது. இருவரது தைரியமான முடிவு இந்திய அணி தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

- Advertisement -