நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி தற்போது நடைபெற்றுள்ளது.
இதில் பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றியை பெற்றது.
இலங்கை நியூசிலாந்து இரண்டாவது டி20
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி அதே டம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணி இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில் யங் 32 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா நான்கு ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி களம் இறங்கியது.
கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து
எளிதாக இந்த இலக்கை இலங்கை அணி வெற்றி பெறும் நிலையில் இன்று எதிர்பார்க்கப்பட்ட போது அதற்கு தகுந்தவாறு இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர் நிஷான்கா நிதானமாக விளையாடினார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு தர மற்ற இலங்கை அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். ராஜபக்ஷா மற்றும் தீக்ஸ்சானாவை தவிர மற்ற எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க:124 ரன்.. கேப்டன் சூர்யாவின் தவறான ஒரு முடிவு.. வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீண்.. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ் கடைசி ஓவரை வீச அந்த ஓவரில் மட்டும் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து இறுதியாக ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக நியூசிலாந்து பெற்ற வெற்றிகளில் குறைந்த ரன்களில் வெற்றி பெற்ற வரலாற்றுப் போட்டியாக நியூசிலாந்து அணிக்கு அமைந்துள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷான்கா 51 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இறுதியில் இலங்கை அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமணில் முடிவடைந்தது. இதில் பிலிப்ஸ் 1.5 அவர்களின் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.