56/8.. 115 ரன் வித்தியாசம்.. பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி.. நியூசிலாந்து அணி தொடரை வென்றது

0
237
Pakistan

இன்று நியூசிலாந்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தான அணி ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.

தற்போது பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் தற்போது டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகளில் 2 போட்டிகளை நியூசிலாந்து அணியும் ஒரு போட்டியை பாகிஸ்தான் அணியும் வென்று இருந்தன.

- Advertisement -

துவக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிம் செப்பர்ட் அதிரடியாக 22 பந்தில் 44 ரன்கள், பின் ஆலன் அதிரடியாக 20 பந்தில் 50 ரன்கள் எடுத்து வலிமையான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இந்த தொடக்கத்தை நியூசிலாந்து மிடில் ஆர்டர் தவறவிட, இறுதி கட்டத்தில் கேப்டன் பிரஸ்வெல் பொறுப்பை உணர்ந்தும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி 26 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஹாரிஸ் ரவுப் 3 மற்றும் அப்ரார் அகமது 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி படுதோல்வி

இதைத்தொடர்ந்து கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹாரிஸ் மற்றும் 2, ஹசன் நவாஸ் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெரிய சரிவை சந்தித்தது. இந்த முறை கேப்டன் சல்மான் அலி ஆகாவும் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையில் நீக்கப்பட்ட இர்பான் பதான்.. பின்னணியில் நடந்தது என்ன? – வெளியான தகவல்கள்

பாகிஸ்தான அணி ஒரு கட்டத்தில் 56 ரன்னுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் அப்துல் சமாத் மட்டும் தாக்குப்பிடிப்பு விளையாடி 44 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 105 ரன் மட்டும் எடுத்து சுருண்டது. நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றியது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -